#bottlecapchallenge: ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த நடிகர்கள்
மும்பை: பாட்டில் மூடி சவாலை நடிகர் சோனு சூத் அருமையாக செய்துள்ளார்.
பாட்டில் மூடி சவால் சாதாரண மக்களை விட திரையுலக பிரபலங்களுக்கு தான் அதிகம் பிடித்துள்ளது. ஆக்ஷன் கிங் அர்ஜுன் பேக் கிக் செய்து பாட்டில் மூடியை லாவகமாக திறந்தார்.

இந்நிலையில் தமிழ் படங்களில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் சோனு சூதும் பாட்டில் மூடி சவாலை ஏற்று வீடியோ வெளியிட்டுள்ளார். ஜிம்மில் ஒர்க்அவுட் செய்தபடியே அவர் பாட்டில் மூடியை திறந்துள்ளார்.
சோனு சூத் தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் தமிழரசன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பாபு யோகேஸ்வரன் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பது கூடுதல் சிறப்பு. சுரேஷ் கோபி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
முன்னதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் பாட்டில் மூடி சவாலை ஏற்று அதை கையால் திறந்து வீடியோ எடுத்து வெளியிட்டார். இந்நிலையில் சோனு சூதும் வித்தியாசமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் ஸ்ரேயாஸ் தல்பதேவோ பாட்டில் மூடி சவாலை ஏற்று அதை காமெடியாக செய்து நீரை சேமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். நீரின் அருமை என்ன என்பதை தமிழக மக்கள் அதிலும் குறிப்பாக சென்னை மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சோனு, ஸ்ரேயாஸ் மட்டும் அல்ல பாலிவுட்டின் சீனியர் நடிகர்களில் ஒருவரான கோவிந்தாவும் பாட்டில் மூடி சவாலை ஏற்று வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் இந்த வயதிலும் சவாலை ஏற்றதை பார்த்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டியுள்ளனர்.
சோனு சூத் ஒர்க்அவுட் செய்த மாதிரியும் ஆகிவிட்டது, சவாலை ஏற்றது மாதிரியும் ஆகிவிட்டது. மேலும் ஸ்ரேயாஸும் சவாலை ஏற்றதுடன் அதன் மூலம் தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











