வேலைக்காரன் படத்தின் புது லிரிக்கல் வீடியோவை பார்த்தீர்களா?
சென்னை: வேலைக்காரன் படத்தில் வரும் உன் கை நாளை உயராதோ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ள வேலைக்காரன் படம் வரும் 22ம் தேதி ரிலீஸாக உள்ளது.

படத்தில் வரும் குடிசை பகுதிக்காக 7.5 ஏக்கரில் செட் போட்டு காட்சிகளை படமாக்கியுள்ளனர். இந்நிலையில் உன் கை நாளை உயராதோ என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். படக்குழு ஒவ்வொரு வீடியோவாக வெளியிட்டு ரதிகர்களின் ஆவலை தூண்டி வருகிறது.
Comments


Click it and Unblock the Notifications