ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் பெல்லி டான்ஸ் வீடியோவை பார்த்தீங்களா?

By Siva

மும்பை: ஜான்வி கபூர் பெல்லி டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

சல்மான் கானின் தங்கை அர்பிதாவின் கணவர் ஆயுஷ் சர்மா ஹீரோவாக அறிமுகமான லவ்யாத்ரி படத்தில் வரும் ஒரு பாடலுக்கு பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தனது பயிற்சியாளருடன் சேர்ந்து பெல்லி டான்ஸ் ஆடினார்.

Have you seen this belly dance video of Janhvi Kapoor?

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ஜான்வியின் ரசிகர்கள் அவரின் திறமையையும், அழகையும் பாராட்டி அந்த வீடியோவை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

முன்னதாக ஜூன் மாதம் ஜான்வி டிடி2 சவாலை ஏற்று பெல்லி டான்ஸ் ஆடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவும் வைரலாகி ஜான்வியின் பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டானது.

அம்மா ஸ்ரீதேவியை போன்றே ஜான்வியும் டான்ஸ் ஆடுவதில் வல்லவராக உள்ளார். ஜான்வி தற்போது பாலிவுட்டில் ரொம்ப பிசியாகிவிட்டார். தனக்கு மிகவும் பிடித்த ஹீரோவான ராஜ்குமார் ராவுடன் ரூஹி அஃப்சா, கார்த்திக் ஆர்யனுடன் தோஸ்தானா 2, கரண் ஜோஹாரின் தக்த் உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார்.

இந்நிலையில் ஜான்வி ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள தல 60 படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்று செய்திகள் வெளியாகின. தன் மகள் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்பது ஸ்ரீதேவியின் ஆசை என்பது குறிப்பிடத்தக்கது. தல 60 படத்தின் பூஜை வரும் 29ம் தேதி நடைபெறும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கெஞ்சிக் கதறாமலேயே தல படங்கள் குறித்து அப்டேட் கிடைப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அஜித் ரசிகர்கள் மட்டும் இன்றி பிற நடிகர்களின் ரசிகர்களும் படத்தையும், அஜித்தின் நடிப்பையும் பாராட்டியுள்ளனர். கெரியரின் உச்சத்தில் உள்ள அஜித் இப்படி ஒரு படத்தை தேர்வு செய்துள்ளதை பலரும் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X