பணத்துக்காக எல்லாம் செஞ்சிட்டு இப்போ இது தேவையா?: மன்னிப்புக் கேட்ட மலையாள நடிகர் லால்!

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் லால் ரசிகர்களிடம் மன்னிப்புத் தெரிவித்துள்ளார்.

பணம் தேவைப்பட்டதால் ஆன்லைன் ரம்மி பக்கம் சென்றுவிட்டதாக லால் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், லால் மன்னிப்புக் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் முன்னணி குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் லால். ஏராளமான மலையாள படங்களில் பல சிறப்பான பாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் ஃபாசில், பிருத்விராஜ், துல்கர் சல்மான், நிவின் பாலி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் லால் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழிலும் தாறுமாறு

தமிழிலும் தாறுமாறு

தமிழில் விஜய்காந்துடன் 'எங்கள் அண்ணா', விஷாலுக்கு வில்லனாக 'சண்டக்கோழி', ஜெயம் ரவியுடன் 'தீபாவளி', சிம்புவுடன் 'காளை', சிவகார்த்திகேயனுடன் 'சீமராஜா', கார்த்தியுடன் 'சுல்தான்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'கர்ணன்' படத்தில் லாலின் நடிப்பு பெரிதும் வரவேற்பை பெற்றது. அதேபோல், சமீபத்தில் வெளியான 'டாணாக்காரன்' திரைப்படத்திலும் இவரது மிரட்டலான நடிப்பைக் காணலாம்.

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி

இந்த நிலையில், நடிகர் லால் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததை பலரும் கடுமையாக விமர்சித்தினர். ஆன்லைன் ரம்மி விளையாட்டால் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தற்கொலை செய்துகொள்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் பல குடும்பங்கள் நடுத் தெருவில் நின்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால், இதன் பாதிப்பை உணராத நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் பணத்துக்காக ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்து வருகின்றனர்.

பொறுப்பு வேண்டாமா?

பொறுப்பு வேண்டாமா?

இதனால், ரசிகர்களால சிறந்த நடிகராக பார்க்கப்படும் லால் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தது சர்ச்சையானது. மற்ற நடிகர்களைப் போல் அல்லாமல், லால் கொஞ்சம் பொறுப்போடு நடந்திருக்க வேண்டும் என, பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஒருகட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த லால் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து அதிகமாகி கொண்டே சென்றது.

மன்னிச்சிடுங்க மக்களே

மன்னிச்சிடுங்க மக்களே

தொடர்ச்சியான விமர்சனங்களால் தன் தவறை உணர்ந்த லால், இப்போது வெளிப்படையாக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளார். மேலும், "கொரோனா ஊரடங்கு காலங்களில் பணம் தேவைப்பட்டதால், ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்துவிட்டேன், அதனால் உங்களில் யாரும் பாதிக்கப்பட்டிருந்தால் தன்னை மன்னித்துவிடுமாறும்" மிக உருக்கமாகக் கேட்டுள்ளார். இதற்கு வரவேற்புத் தெரிவித்துள்ள ரசிகர்கள், மற்ற நடிகர்களும் இந்த தவறை உணர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X