எல்லா நம்பருமே லக்கிதான்... சொல்கிறார் ஷங்கர் #HBD Shankar

சென்னை: பொதுவாகவே அனைத்து எண்களுமே நல்ல எண்கள் தான், அதில் அதிர்ஷ்ட எண், துரதிருஷ்ட எண் என எதையும் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

பிரம்மாண்டத்திற்கு மறுபெயர் என்றால் அது டைரக்டர் ஷங்கர் தான் என்கிற அளவிற்கு தமிழ் திரையுலகில் பிரமாண்டம் என்றால் என்ன என்பதை தனது படங்கள் மூலம் அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியவர். அவர் தனது 56வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிறந்து, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர் தனது குழுவுடன் சேர்ந்து மேடை நாடக நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் அதை தற்செயலாக கவனிக்க அவர் மூலமாக திரையுலகிற்குள் திரைக்கதை எழுத்தாளராக நுழைந்தார். நடிகராக விரும்பிய ஷங்கர் இன்று தமிழ்த் திரையுலகில் சிறந்த முன்னணி இயக்குனராக விளங்குகிறார்.

ஜென்டில்மேன்

ஜென்டில்மேன்

1993ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம்பேர் விருது மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் பெற்றார். காதலன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், சிவாஜி என அவரின் ஒவ்வொரு படத்திலும் சமூக பிரச்சனைகள் மற்றும் விழிப்புணர்வை கருவாக கொண்ட கதைகளே அமைந்திருக்கும்.

பிரம்மாண்ட இயக்குநர்

பிரம்மாண்ட இயக்குநர்

புதுமைக்கு பெயர் போன இயக்குனர். குறிப்பாக பாடல் காட்சிகள், அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், வித்தியாசமான ஒப்பனைகளுக்கு அதிக கவனம் செலுத்துபவர். எந்திரன், ஐ, 2.0 போன்ற படங்கள் பிரம்மாண்டத்தின் உச்சம்.

சங்கருக்கு லக்கி நம்பர்

சங்கருக்கு லக்கி நம்பர்

பொதுவாகவே ஷங்கர் சில விஷயங்களில் சென்டிமென்டை எதிர்பார்ப்பார். அதில் ஒன்று பலருக்கு, நம்பர் 8 என்றாலே அது துரதிஷ்டமான ஒன்று என 8ஆம் நம்பரையோ அல்லது கூட்டுத்தொகை 8ஆக வரும் எண்களையோ விலக்கியே வைப்பார். ஆனால் இயக்குனர் ஷங்கர் அவர்களின் பிறந்தநாள் எண்ணின் கூட்டுத் தொகை (1+7) 8. அது அவருக்கு மிகவும் ராசியான எண் என்று பல இடங்களில் தெரிவித்துள்ளார். மேலும் அவரது பல கார்களின் பதிவு எண்ணின் கூட்டுத்தொகை எண் 8 ஆகவே வைத்திருந்தார் என்பது கூடுதல் செய்தி.

அதிர்ஷ்ட கூட்டணி

அதிர்ஷ்ட கூட்டணி

இருப்பினும் அனைத்து எண்களுமே நல்ல எண்கள் தான் என்றும் இதில் அதிர்ஷ்டம், துரதிஷ்டம் என்றும் எதையும் பிரித்து பார்க்க தேவையில்லை என்று தற்போது கூறிவருகிறார். ஷங்கரின் படங்களில் ஹிட் பாடல்களுக்கு குறைவே இருக்காது. ஏ.ஆர்.ரஹ்மான்-டைரக்டர் ஷங்கர் கூட்டணி என்றாலே பாடல்கள் அனைத்தும் செம ஹிட். படம் வெளியாவதற்கு முன்னரே பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி விடும். இவர்கள் இருவருக்கும் செம பார்முலா. ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், 2.0 போன்ற படங்கள் இவர்கள் கூட்டணியில் வெளியாகிய பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.

இந்தியன் 2

இந்தியன் 2

முதல்வனின் ரீமேக் படமான நாயக் மூலன் பாலிவுட்டில் அறிமுகமானார். தனது நடிப்பு ஆர்வத்தால் அவரின் படங்களில் சில பாடல்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். வெயில் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றுள்ளார் ஷங்கர். கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன்-2 உருவாகி வருகிறது. இந்தியன் முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகமும் நிச்சயம் செம ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் வெளியீட்டுக்காக ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. பிரம்மாண்டத்தின் தலைவன் மென்மேலும் வளர ஃபில்மி பீட் சார்பாக வாழ்த்துக்கள்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X