Jana Nayagan First Roar: தளபதிக்கு பிறந்த நாள்னா சும்மாவா! இரட்டை கத்தியோடு வந்த விஜய்.. கன்ஃபார்ம் பாலிடிக்ஸ்
சென்னை: நடிகர் தளபதி விஜய் இன்று அதாவது ஜூன் 22ஆம் தேதி தனது 51 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் இவர் தற்போது நடித்து வரும் தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இன்று விஜய்யின் பிறந்த நாள் என்பதால் ஜன நாயகன் படக்குழு படத்தில் இருந்து விஜய்யின் லுக்கை விஜய்யின் பிறந்த நாளான இன்று நள்ளிரவு 12 மணிக்கு ரிலீஸ் செய்துள்ளது. பாடல் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவரது லுக் தொடர்பான கிளிம்ஸ் வீடியோ வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
ஜன நாயகன் படம் விஜய்யின் திரை வாழ்க்கையில் 69வது படம். மேலும் இப்படம் தான் இவரது கடைசி படமும் கூட. இந்த படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு விஜய் முழுக்க முழுக்க தனது அரசியல் பணியை முழுக்க முழுக்க கவனிக்க உள்ளார். திரைத்துறையில் இருந்து கொண்டு அவர் கொண்டாடவுள்ள கடைசி பிறந்த நாள் இந்த பிறந்தநாள் என்பதால், ஜன நாயகன் படக்குழுவினர், திரையுலகினர், ரசிகர்கள் என விஜய்க்கு வாழ்த்து குவிந்து வருகிறது.
ஜன நாயகன் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இயக்குநர் ஹெச். வினோத் படத்தை எழுதி இயக்குகிறார். இந்த படம் அரசியல் கருத்தை மையமாக கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வரக்கூடிய தை பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

விஜய்யின் லுக்: இந்நிலையில் விஜய்யின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவும், அவரது ரசிகர்களை குஷிப்படுத்தவும் படத்தில் இருந்து விஜய்யின் லுக் அடங்கிய கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவை படக்குழு நள்ளிரவில் வெளியிட்டுள்ளாதால் ரசிகர்கள் நள்ளிரவு வரை விழித்திருந்து வீடியோவை பார்த்து ரசித்து வருகிறார்கள். மேலும் இந்த வீடியோவையும் விஜய்யின் லுக்கையும் இணையத்தில் டிரெண்டாக்கியும் வருகிறார்கள். இணையத்தில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இணையத்தில் விஜய்க்கான பிறந்தநாள் வாழ்த்து ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இரட்டைக் கத்தி: படக்குழு வெளியிட்டுள்ள கிளிம்ஸ் வீடியோவில் விஜய் காவல் துறையின் உடையில் இருக்கிறார். இது மட்டுமில்லாமல் அவர் கையில் நீண்ட வாள் ஒன்றை வைத்துக் கொண்டு நடந்து வருகிறார். அதன் பின்னர் அந்த வாளை தனது இரத்தம் வடியும் தனது கையில் அழுத்திப் பிடித்துள்ளார். அதேபோல் மற்றொரு கையில் இருந்து இன்னொரு கத்தியை எடுத்து தனது மீசையை முறுக்கிவிட்டு கத்தியை வீசுகிறார். படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில் இரட்டைக் கத்திகளை விஜய் வைத்துள்ளார். இது விஜய்யின் கத்தி படத்தின் மூலம் தான் நேரடியாக சமகால அரசியலைப் பேசினார். அதேபோல் இந்த வீடியோவில் இரட்டைக் கத்திகளுடன் அவர் இருப்பதால், கத்தி படத்தைப் போல இரண்டு மடங்கு சமகால அரசியலை பேசும் படமாக இந்தப் படம் இருக்கும் என்பதைத்தான் குறியீடாக கூறுகிறார்கள் என ரசிகர்களும் இணையவாசிகளும் பேசி வருகிறார்கள். இந்த வீயோவை சமூல வலைதளங்களில் பகிர்ந்து விஜய் ரசிகர்கள் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











