Yuvan Shankar Raja Net Worth: பின்னணி இசையின் கிங்.. யுவன் சங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?

சென்னை: தமிழ் திரைப்படத் துறையில் உள்ள முன்னணி நட்சத்திரங்களில் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா (HBD Yuvan Shankar Raja) மிகவுமே முக்கியமான இடத்தைப் பெறுகின்றார். குறிப்பாக, இசைஞானி இளையராஜாவின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த யுவன் சங்கர் ராஜா, அதன் பின்னர் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுமே கொண்டாடும் இசை அமைப்பாளராக மாறினார். இன்று அதாவது ஆகஸ்ட் 31ஆம் தேதி தனது 45வது பிறந்த நாளைக் கொண்டாடும் யுவன் சங்கர் ராஜாவின் சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

1997ஆம் அண்டு வெளிவந்த அரவிந்தன் என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். யுவன் சங்கர் ராஜாவுக்கு அவரது தொடக்க காலத்தில் சில படங்கள் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை. அதன் பின்னர் 1999ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா நடித்து வசந்த் இயக்கத்தில் வெளியான, பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆனது. இந்தப் படத்திற்குப் பின்னர் யுவன் சங்கர் ராஜாவின் மார்க்கெட் உயர்ந்தது.

yuvan shankar raja

தொடக்கத்தில் பாடல்களுக்கு மட்டும் அதிக கவனம் கொடுத்து வந்த யுவன் சங்கர் ராஜா அதன் பின்னர், படத்தின் தன்மையை ரசிகர்களிடம் கடத்த, பின்னணி இசையும் மிகவும் முக்கியமானது என்பதைப் புரிந்து கொண்டு, பின்னணி இசையிலும் கவனம் செலுத்தினார். இன்றைக்கும் பின்னணி இசையில் ராஜாவாக திகழ்ந்து வருகின்றார். குறிப்பாக இவரது இசையில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி, மங்காத்தா உள்ளிட்ட படங்களை வெவ்வேறு ஜானரில் வரிசைப்படுத்த முடியும்.

இசை அமைக்க சம்பளம்: இன்றைய காலகட்டத்தில் நடிகர்களுக்காக, படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்காக இசை அமைக்கும் முறையை பல இசை அமைப்பாளர்கள் பின்பற்றிவரும் நிலையில், படத்தின் கதையைக் கேட்டு, அதற்காக பணியாற்றுபவர் யுவன் சங்கர் ராஜா. இவரைப் பொறுத்தவரையில், வளர்ந்த நடிகர் வளர்ந்து வரும் நடிகர் என்றெல்லாம் கணக்கில்லை. இன்றைக்கு ஒரு படத்திற்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைக்க, ரூபாய் 5 கோடி முதல் ரூபாய் 8 கோடி வரை சம்பளமாக வாங்குகின்றார். ஆனால் இவரது இசையில் விஜய் நடித்து அடுத்து வெளியாகவுள்ள தி கோட் படத்திற்கு ரூபாய் 10 கோடி சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகின்றது.

yuvan shankar raja

தயாரிப்பு நிறுவனம்: இதுமட்டும் இல்லாமல், ஒய்.எஸ்.ஆர் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி படங்களையும் தயாரித்து வருகின்றார். குறிப்பாக, இவரது தயாரிப்பில் வெளியான படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றுவருகின்றது. இதன் மூலமும் யுவன் சங்கர் ராஜாவுக்கு வருமானம் வந்து கொண்டு இருக்கின்றது. அதேபோல், இவரது இசையில் உருவான பாடல்களுக்கு ராயல்ட்டி மூலம் ஆண்டுக்கு சில கோடிகள் கிடைப்பதாக கூறப்படுகின்றது.

சொகுசு பங்களா: அதேபோல், யுவன் சங்கர் ராஜா சென்னையில் ரூபாய் 10 கோடி மதிப்பிலான சொகுசு பங்களாவைக் கட்டியுள்ளார். சொகுசு பங்களாவின் கட்டடத்திற்கு மட்டும் ரூபாய் 10 கோடிக்கு மேல் செலவு செய்ததாக கூறப்படுகின்றது. இதுமட்டும் இல்லாமல் சொகுசு பங்களா கட்டப்பட்டுள்ள இடத்தின் மதிப்பும் பல கோடிகளைத் தாண்டும் என்கின்றனர். இவை மட்டும் இல்லாமல் யுவன் சங்கர் ராஜா பல கோடி மதிப்பிலான சொகுசுக் கார்களை வைத்துள்ளார். குறிப்பாக, பென்ஸ் GLE கிளாஸ், ஆஸ்டன் மார்டின் வேன்குவிஸ், மினி கூப்பர் S போன்ற கார்களை வைத்துள்ளார்.

yuvan shankar raja

மொத்த சொத்து: தமிழ்நாடு மட்டும் இல்லாமல், வெளிநாடுகளிலும் இசைக் கச்சேரிகள் நடத்தி அதன் மூலமும் தனது வருமானத்தை பெருக்கி வருகின்றார். தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்கும் யுவன் சங்கர் ராஜாவுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 125 கோடிகள் வரை சொத்துகள் இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X