தல போல வருமா.. கொண்டாடும் அஜித் ரசிகர்கள்.. டிரெண்டாகும் #HBDDearestThalaAJITH
சென்னை: தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இப்போதே ஹாஷ்டேக்கை உருவாக்கி மில்லியன் கணக்கில் ட்வீட்களை பதிவிட்டு அஜித் ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
Recommended Video
1971ம் ஆண்டு மே 1ம் தேதி பிறந்த நடிகர் அஜித், நாளை தனது 49வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடிகர் அஜித் தவிர்க்க சொல்லியிருந்தாலும், அவரையே உயிர் என நினைத்து வாழும் ரசிகர்கள் சும்மாவா இருப்பார்கள்.

டாப் டிரெண்டிங்
#HBDDearestThalaAJITH என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் இந்தியளவில் டாப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றனர். மில்லியன் கணக்கான ரசிகர்கள் இந்த ஹாஷ்டேக்கில் நடிகர் அஜித்துக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். அண்மையில் பிறந்த நாள் காமன் டிபி டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

மே தினம்
தன்னைப் போலவே சக நடிகர்களையும் நினைக்கக் கூடியவர், தயாரிப்பாளருக்கு கொடுக்கும் அதே மரியாதையை புரொடக்ஷன் பாய்க்கும் கொடுக்கும் மாமனிதர் அஜித். உழைப்பாளர்கள் தினமான மே 1ம் தேதி சரியாக பிறந்திருக்கிறார் தல அஜித் என அவரது ரசிகர்கள் ட்விட்டரை டிரெண்டிங்கில் திணறடித்து வருகின்றனர்.

வெற்றி குதிரை
வெற்றி என்பது பட்டாம் பூச்சி மாற்றி மாற்றி மலர்களில் அமரும் உனக்கு மட்டும் நிரந்தர மென நினைத்தால் சரி அல்ல என அட்டகாசம் படத்தில் வரும் உனக்கென்ன பாடல் அமைந்திருக்கும். வெற்றி என்பது முரட்டுக் குதிரை என்றும், அதை அடக்க தெரியாமல் விட்டால், வேறு ஒரு ஜாக்கியை தேடி போய்விடும் என நடிகர் அஜித் சொன்ன வார்த்தைகளே அந்த பாடலுக்கான இன்ஸ்பிரேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

1.5 மில்லியன் ட்வீட்ஸ்
தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அஜித் ரசிகர்கள் #HBDDearestThalaAJITH டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹாஷ்டேக் உருவாக்கப்பட்ட 105 நிமிடத்திற்குள் இப்படியொரு இமாலய சாதனையை தல ரசிகர்கள் படைத்துள்ளனர். மேலும், நடிகர் அஜித்தின் அடுத்த படமான வலிமை படத்தின் ஹாஷ்டேக்கையும் கூடவே டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பர்த்டே கேக்
நடிகர் அஜித்தின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் பிரம்மாண்ட கேக்குகளை தயார் செய்து அஜித் ரசிகர்கள் கூட்டமாக வெட்டி கொண்டாடி மகிழ்ந்து வந்தனர். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக லாக் டவுன் போடப்பட்டிருப்பதால், பழைய கேக் கட்டிங் புகைப்படங்களை பகிர்ந்தும், தியேட்டர்களில் செய்த அலப்பறைகளை பகிர்ந்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











