twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தி திணிப்பு: அய்யோ, இந்நேரம் பார்த்து கருணாநிதி இல்லையே #hbdkalaignar96

    By Siva
    |

    Recommended Video

    இந்தியை திணிக்க முயன்றால் வேடிக்கை பார்க்க மாட்டோம்: முத்தரசன் எச்சரிக்கை

    சென்னை: கலைஞர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால் இந்நேரம் சும்மா இருந்திருப்பாரா என்று அவரின் பிறந்தநாள் அன்று அவரை தமிழர்கள் ரொம்பவும் மிஸ் பண்ணுகிறார்கள்.

    கலைஞர் கருணாநிதியின் 96வது பிறந்தநாள் இன்று. ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இந்த உலகை விட்டுச் சென்ற பிறகு தமிழக அரசியலில் சுவாரஸ்யமே இல்லை என்று நெட்டிசன்கள் அடிக்கடி கூறி வருகிறார்கள்.

    இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளான இன்று #HBDKalaignar96 என்ற ஹேஷ்டேகுடன் அவரை பற்றி ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    கருணாநிதி

    தமிழகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதற்கு எதிராக குரல் கொடுத்தவர் கருணாநிதி. மத்திய அரசு இந்தியை திணிக்க தயாராகி வரும் நேரத்தில் கருணாநிதி இல்லாமல் போய்விட்டாரே. அவர் இருந்திருந்திருந்தால் இந்நேரம் பெரிய போராட்டமே வெடித்திருக்குமே என்று நெட்டிசன்கள் ஃபீல் பண்ணுகிறார்கள்.

    தமிழ்

    தமிழ்

    இந்தி மொழியை கற்குமாறு கூறலாம் ஆனால் திணிக்கக் கூடாது என்று மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தென்னிந்திய மக்கள் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். வட இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளை யாரும் கற்பது இல்லை. அப்படி இருக்கும்போது எங்களை மட்டும் கட்டாயப்படுத்தி இந்தி கற்க வைக்க நினைப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் தான் கருணாநிதி இல்லாதது தமிழர்களுக்கு பெரிய குறையாகத் தெரிகிறது.

    முடியுமா?

    திமுக ஆதரவாளர்களோ கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு அவரை மாதிரி முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அரசியல் மட்டும் இன்றி சினிமாவிலும் சாதனை செய்தவர் கருணாநிதி. அவரின் காவியப் படங்களை மறக்க முடியுமா?. தமிழகம் உங்களை மிஸ் பண்ணுகிறது ஐயா என்று திமுகவினர் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.

    மொழி

    கருணாநிதியை வாழ்த்தி போடும் ட்வீட்டுகளில் இந்தி திணிப்பை நிறுத்துங்கள், இந்தி நம் தேசிய மொழி இல்லை என்பதை தெரிவிக்கும் ஹேஷ்டேகுகளை சேர்த்துள்ளனர். மேலும் கலாச்சாரத்திற்காக போராடிய தமிழர்கள் மொழிக்காக போராடாமல் இருக்க மாட்டோம் என்றும் பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    Tamils are missing Karunanidhi big time as they don't want hindi imposition. Fans and DMK people are tweeting about Karunanidhi and hindi imposition on his 96th birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X