இந்திய அளவில் ட்ரென்ட்டாகும் கமல்ஹாசன்.. திக்குமுக்காடும் டிவிட்டர்! #HBDKamalHaasan

Recommended Video

Happy birthday kamal | Best Kamal Haasan voice songs | கமல்ஹாசன் பாடிய சிறந்த பாடல்கள்

சென்னை: கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ஹேப்பி பர்த்டே கமல்ஹாசன் என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரென்ட்டாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு கமலின் ரசிகர்கள் பல இடங்களில் நலத்திட்ட உதவிகளை மேற்கொள்கின்றனர்.

தனது பிறந்த நாளில் சொந்த ஊரான பரமக்குடியில் தந்தை சீனிவாசனுக்கு சிலை திறக்கவுள்ளார் நடிகர் கமல்ஹாசன். இதற்காக தனது அண்ணன், மகள்கள் என குடும்பத்துடன் பரமக்குடிக்கு சென்றிருக்கிறார் கமல்.

இந்திய அளவில் டாப்

இந்திய அளவில் டாப்

இந்நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு #HBDKamalHaasan என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்ட்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டாப்பில் உள்ளது.

நிகரில்லா கலைஞன்

தமிழ் சினிமாவின் நிகரில்லா கலைஞன் கமல்ஹாசன் என புகழ்ந்திருக்கிறார் இந்த ரசிகர்.

கடவுள் நம்பிக்கை இல்லையா?

கமலின் பல வசனங்கள் மனதில் பதிந்து இன்றுவரை என்னை செலுத்திக் கொண்டிருக்கின்றன. சிகப்பு ரோஜாக்களில் ஸ்ரீதேவி உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா எனக்கேட்க பரிட்சைக்கு போகும் முன் கோவிலுக்கு போவதற்கு பதில் இன்னொரு கேள்வி படிக்கலாம்ல என்பார் என தான் ரசித்ததை பகிர்ந்திருக்கிறார் இந்த ரசிகர்.

முழுமையடையாது..

"பொறந்தது பனையூரு மண்ணு! மருதநாயகம் என்பது பேர்களில் ஒண்ணு" இந்த படம் வராமல் தமிழ்சினிமா என்றுமே முழுமையடையாது என மருதநாயகம் படத்தை தெரிவித்துள்ளார்.

உலக சினிமாவின் மாஸ்டர் பீஸ்

மாஸ்டர் பீஸ் ஆஃப் உலக சினிமா.. என்று கமலை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

சிறந்த இயக்குநர்

இந்திய சினிமாவின் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குநர் .. சினிமாவின் ஆண்டவர் கமல்ஹாசன் இன்று பிறந்த தினம் என்று வாழ்த்து கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X