நடிகர் கார்த்தி பிறந்த நாள்.. டிரெண்டாகும் #HBDKarthi ஹேஷ்டேக்.. சுல்தான் பர்ஸ்ட் லுக் இல்லையாமே!
சென்னை: நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள், #HBDKarthi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்தி, 'பருத்திவீரன்' படம் மூலம் ஹீரோவானார்.
அமீர் இயக்கிய இந்தப் படத்தில் பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்திருந்தனர்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. படமும் ஹிட்டானது. இதில் நடித்ததற்காக, பிரியாமணிக்கும் எடிட்டர், ராஜா முகமதுவுக்கு தேசிய விருது கிடைத்தது. பல்வேறு விருதுகளை பெற்ற இந்தப் படம் உலகப் திரைப்பட விழாக்களிலும் கலந்துகொண்டு பாராட்டுகளை பெற்றது.

சூப்பர் ஹிட்
இந்தப் படத்தை அடுத்து, செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தார் கார்த்தி. அடுத்து லிங்குசாமி இயக்கிய பையா படம் அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அடுத்த நான் மகான் அல்ல, சிறுத்தை படங்களும் கமர்சியல் வெற்றி பெற்றன. சகுனி, அலெக்ஸ் பாண்டியன், அழகுராஜா, பிரியாணி படங்களில் அதிக வரவேற்பை பெறவில்லை.

கிராமத்து இளைஞன்
என்றாலும் அதற்குப் பிறகு வந்த 'மெட்ராஸ்' அவருக்கு வேறு இமேஜை கொடுத்தது. பின்னர் முத்தையா இயக்கிய கொம்பனில், 'பருத்திவீரனு'க்குப் பிறகு அழுத்தமான கிராமத்து இளைஞன் கேரக்டரில் நடித்திருந்தார் கார்த்தி. இந்தப் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தீரன் அதிகாரம் ஒன்று, கடைகுட்டி சிங்கம், கைதி உட்பட ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் கார்த்தி, அடுத்து 'சுல்தானு'க்கு காத்திருக்கிறார்.

பர்ஸ்ட் லுக் இல்லை
இந்தப் படத்தை, பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சுல்தான் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்த்தனர், ரசிகர்கள். ஆனால், லாக்டவுன் முடிந்ததும்தான் வெளியிட இருக்கிறார்களாம். ரசிகர்கள் #HBDKarthi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.
Recommended Video
பாண்டிராஜ்
இதில் அவர் நடித்த படங்கள் மற்றும் அவர் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். ஏராளமான திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் பாண்டிராஜ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எங்கள் கடைக்குட்டி சிங்கத்துக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











