மகேஷ் பாபு பிறந்தநாள் பரிசு.. வெளியானது சர்காரு வாரி பாட்டா மோஷன் போஸ்டர்.. #HBDMaheshBabu
ஹைதராபாத்: டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
மகேஷ் பாபுவின் பிறந்தநாள் பரிசாக அவரது அடுத்த படமான சர்காரு வாரி பாட்டா மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
பிரபலங்கள், ரசிகர்கள் என மகேஷ் பாபுவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சென்னை பையன்
1975ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி சென்னையில் பிறந்தவர் நம்ம டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு. பிறந்தது மட்டுமின்றி கல்லூரி படிப்பையும் லயோலா கல்லூரியில் தான் முடித்தார். 45 வயதாகும் நடிகர் மகேஷ் பாபுவுக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை பொழிந்து வருகின்றனர். ஹேப்பி பர்த்டே மகேஷ் பாபு.

சிரஞ்சீவி வாழ்த்து
தெலுங்கு திரையுலகின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங் மகேஷ் பாபுவின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு, மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதற்கு மகேஷ் பாபு ரசிகர்கள் நன்றி தெரிவித்து, இருவரும் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு #HBDMaheshBabu என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தெறிக்கவிடும் ரசிகர்கள்
பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகனான மகேஷ் பாபு சிறு வயதிலேயே தனது தந்தையின் படமான நீடா படத்தில் 1979ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1999ம் ஆண்டு ராஜகுமாருடு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான மகேஷ் பாபு, ஒக்கடு, போக்கிரி, மகரிஷி, பரத் அனி நேனு, ஸ்ரீமந்துடு, சரிலேரு நீக்கெவ்வரு என பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார். மகேஷ் பாபுவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

சூப்பர்ஸ்டார்
சவுத் இந்தியா பிரின்ஸ் என அழைக்கப்பட்டு வந்த பேரழகன் மகேஷ் பாபு, தனது அதிரடி ஹிட் படங்களால் டோலிவுட்டின் சூப்பர்ஸ்டாராக மாறி உள்ளார். தெலுங்கு திரையுலகில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் மெகா ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும், மகேஷ் பாபுவுக்குத் தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்தநாள் பரிசு
நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக சர்காரு வாரி பாட்டா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. விஜய தேவரகொண்டாவின் கீதா கோவிந்தம் படத்தை இயக்கிய பரசுராம் பெட்லா இந்த படத்தை இயக்குகிறார். சிவாஜி படம் போல இந்த படத்திலும் ஒரு ரூபாய் ஹைலைட்டாக காட்டப்படுகிறது.


Click it and Unblock the Notifications











