மாஸ்டர் ஹீரோயின் பிறந்தநாள்.. தெறிக்கவிட்டு கொண்டாடும் தளபதி ரசிகர்கள் #HBDMalavikaMohanan

சென்னை: மாஸ்டர் ஹீரோயின் மாளவிகா மோகனனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Recommended Video

Master Team special Wishes to Thalapathy Vijay | Malavika Mohanan, Anirudh

பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனின் மகளான இவர், மலையாள திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படமே துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்த இவர், கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

27 வயசு

27 வயசு

ஷாருக்கானின் டான், ராயீஸ், மகேஷ் பாபுவின் மகரிஷி, 2018ம் ஆண்டு வெளியாகி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அந்தாதூன், பிருத்விராஜின் புதிய படமான ஆடு ஜீவிதம் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வரும் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யூ. மோகனனுக்கு கடந்த 1993ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மகளாக பிறந்தவர் மாளவிகா மோகனன். இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள்

தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் மாளவிகா மோகனன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தங்களது புதிய தலைவியின் பிறந்தநாளை விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர். #HBDMalavikaMohanan மற்றும் #Master என்ற இரு ஹாஷ்டேக்குகளை வேற லெவலில் டிரெண்ட் செய்து பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

காமன் டிபி வெளியிட்ட இயக்குநர்

காமன் டிபி வெளியிட்ட இயக்குநர்

நடிகர்களின் பிறந்தநாளுக்கு காமன் டிபி வெளியிட்டு கொண்டாடுவதை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை மாளவிகா மோகனனின் பிறந்தநாளை முன்னிட்டு, அட்டகாசமான காமன் டிபியை மாஸ்டர் பட இயக்குநரான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். கையில் ரோஜாப்பூவுடன் மாளவிகா மோகனன் செம அழகாக இருக்கிறார்.

மகேஷ் பாபு ரசிகர்கள்

மகேஷ் பாபு ரசிகர்கள்

பான் இந்திய நடிகையாக கலக்கி வரும் நடிகை மாளவிகா மோகனனின் பிறந்தநாளை முன்னிட்டு, டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தெலுங்கில் இதுவரை மாளவிகா மோகனன் நடிக்கவில்லை என்றாலும், மகேஷ் பாபுவின் பிளாக்பஸ்டர் படமான மகரிஷி படத்திற்கு மாளவிகா மோகனனின் தந்தை தான் ஒளிப்பதிவாளரே, விரைவில் மகேஷ் பாபுவுடன் இணைந்தும் மாளவிகா நடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

கவர்ச்சிப் புயல்

கவர்ச்சிப் புயல்

தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், மாடலிங்கிலும் மிகப்பெரிய ஆர்வம் கொண்டவர். விளம்பர பட நடிகையாக அறிமுகமான இவர், அழகு சாதன விளம்பரத்தில் மம்மூட்டி உடன் இணைந்து நடித்த பிறகே, துல்கர் சல்மானின் பட்டம் போலே படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவரது தாராளமான கவர்ச்சி புகைப்படங்கள் இளைஞர்களை தூங்க விடாமல் செய்து வருகின்றன.

ரஜினி ரசிகர்கள்

ரஜினி ரசிகர்கள்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கேங்ஸ்டர் திரைப்படமான பேட்ட படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக்குக்கு தங்கையாகவும், சசிகுமாரின் மனைவியாகவும் இந்த படத்தில் மாளவிகா நடித்திருந்தார். ரஜினி ரசிகர்கள், சூப்பர்ஸ்டாருடன் மாளவிகா எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்தி வருகின்றனர்.

மக்கள் செல்வன் ரசிகர்கள்

மக்கள் செல்வன் ரசிகர்கள்

தமிழில் நடிகையாக அறிமுகமான மாளவிகா மோகனன், தொடர்ந்து விஜய்சேதுபதி உடன் இணைந்து பேட்ட மற்றும் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ரசிகர்கள், நடிகை மாளவிகா மோகனனின் 27வது பிறந்தநாளை முன்னிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

மரண வெயிட்டிங்

மரண வெயிட்டிங்

மாளவிகா மோகனனின் பிறந்தநாளை முன்னிட்டாவது மாஸ்டர் படத்தில் இருந்து ஏதாவது ஸ்பெஷல் அப்டேட் அல்லது புகைப்படங்கள் வெளியாகுமா? என ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர். அந்த கண்ண பார்த்தாக்கா பாடலின் ஒரு நிமிட வீடியோ பாடலையாவது படக்குழு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்கள் வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X