லேடி சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள்.. இந்திய அளவில் ட்ரெண்டாகும் நயன்தாரா! #HBDNayanthara
சென்னை: நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு #HBDNayanthara என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
Recommended Video
நடிகை நயன்தாரா 2003-ஆம் ஆண்டு மனச்சினக்கரே எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில் ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் நயன்தாரா.

டாப் நடிகர்கள்
இதனை தொடர்ந்து சந்திரமுகியில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்த நயன்தாரா, யாரடி நீ மோகினி, பாஸ் என்கிற பாஸ்கரன், பில்லா என உள்ளிட்ட வெற்றி படங்கள் மூலம் டாப் ஹீரோயின்களின் லிஸ்ட்டில் இடம் பெற்றார். விஜய், அஜித், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வருகிறார் நயன்.

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படமான அறம் படத்தில் நடித்தார். அதன்பிறகு அவரது கிராஃப் எங்கேயோ செல்ல தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

காமன் டிபி
இந்நிலையில் நடிகை நயன்தாரா இன்று தனது 36வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவரது காதலரான விக்னேஷ் சிவன் நேற்றே அவரது நயன்தாராவின் காமன் டிபியை வெளியிட்டார்.

ஹேஷ்டேக்
பிறந்தநாளை கொண்டாடி வரும் நயன்தாராவுக்கு ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனை முன்னிட்டு #HBDNayanthara என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
சூப்படர் ஸ்டார்
பூமியில் மிகவும் அழகான மற்றும் கலாச்சாரத்தை விரும்பும் நபருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் தாழ்மையும் நேர்மையும் நீங்கள் உண்மையிலேயே ஒரு சூப்பர் ஸ்டார் என வாழ்த்து கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
இன்பில்டாக இருக்க வேண்டும்
இந்த ரசிகர், நடிப்பை போறப்போக்கில் கற்றுக்கொள்ள முடியும், ஆனால் மனிதநேயமும் ஒழுக்கமும் யாரும் கற்றுக்கொண்டு வருவதில்லை, அது இன்பில்டாக இருக்கவேண்டும். உங்கள் வேலை மற்றும் செயலில் மட்டும் நீங்கள் ஒரு உண்மையான நடிகையல்ல, உங்கள் நெறிமுறைகளிலும்தான். பிறந்தநாள் வாழ்த்துக்கள், வளர்ந்து கொண்டே இருங்கள் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











