தளபதியின் தலைவிக்கு பிறந்தநாள்.. டிவிட்டரில் டிரெண்டாகும் #HBDSangeethaVIJAY
சென்னை: தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்யின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
Recommended Video
பூவே உனக்காக படத்தை பார்த்து, விஜய் மீது காதல் கொண்ட அந்த ரசிகை, விஜய்க்கு மனைவியாகி இத்தனை ஆண்டுகள் அன்பு ரசிகர்களின் அண்ணியாக திகழ்கிறார்.
விஜய் ரசிகர்கள் இன்று தெறி படத்தின் 4ம் ஆண்டு கொண்டாட்டத்துடன் சேர்த்து, #HBDSangeethaVIJAY என்ற ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தீவிர ரசிகை
இலங்கையில் பிறந்து, இங்கிலாந்தில் செட்டிலான சங்கீதா சொர்ணலிங்கம், தளபதி விஜய்யின் முதல் பிளாக்பஸ்டர் படமான பூவே உனக்காக படத்தை பார்த்து விட்டு, அவரது ரசிகையாக மாறினார். விஜயை காண சென்னைக்கு ஷூட்டிங் பார்க்க வந்த சங்கீதா, விஜயை சந்தித்து, நீண்ட நேரம் நடத்திய சாட்டிங் திருமணத்திற்கு கொண்டு வந்து சேர்த்தது.

திருமணம்
1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் ரசிகை சங்கீதாவை நடிகர் விஜய் திருமணம் செய்து கொண்டார். இந்து முறைப்படியும், கிறிஸ்துவ முறைப்படியும் விஜய் - சங்கீதா திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கும் ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கின்றனர்.
விஜய்யின் பலம்
இளைய தளபதியில் இருந்து தளபதியாக மாறியுள்ள விஜய்க்கு பக்க பலமாக சங்கீதா விஜய் இருந்து வருகிறார். தளபதி ரசிகர்களின் அன்பு அண்ணியாக அறியப்படும் சங்கீதா விஜய்யின் பிறந்த நாளை விஜய் ரசிகர்கள் தளபதி விஜய் பிறந்தநாளுக்கு நிகராகவே ஹாஷ்டேக் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
விஜய் ரசிகர்கள்
மாஸ்டரின் மகாராணியின் பிறந்த நாளை விஜய் ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர். ஹேப்பி பர்த்டே சங்கீதா மேம், நீங்களும், உங்கள் குடும்பமும், ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள் என விஜய் ரசிகர்கள் காலை முதலே தங்களின் அன்பு வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் நிரப்பி வருகின்றனர்.
தல ரசிகர்கள்
சங்கீதாவை நடிகர் விஜய் செல்லமாக கீதா என்று தான் அழைப்பாராம். அதே போல, தல அஜித்தின் மனைவி ஷாலினியின் நெருங்கிய தோழியாகவும் சங்கீதா பல ஆண்டுகளாக பழகி வருகிறார். விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டை இருந்தாலும், இதுபோன்ற பிறந்த நாள் விழாக் காலங்களில், சண்டையை தவிர்த்து அஜித் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சோகத்தில்
விஜய் ரசிகர்கள் சங்கீதா விஜய் பிறந்தநாளை ஹாஷ்டேக் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். ஆனால், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால், லாக்டவுனில் இருந்து வரும் நடிகர் விஜய் குடும்பம், கனடாவில் சிக்கித் தவிக்கும் மகன் ஜேசன் சஞ்சயை சென்னை அழைத்து வர முடியாத சோகத்தில் இருக்கின்றனர். பிறந்த நாள் கொண்டாட்டமும் இல்லை என்றே தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











