நம்ம வீட்டு ஹீரோ.. டாக்டராக போறாரு.. ஹேப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்! குவிகிறது வாழ்த்து!

Recommended Video

Ayalaan first look out now| வெளியானது அயலான் படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்

சென்னை: கஷ்டப்பட்டும் கொஞ்சம் இஷ்டப்பட்டும் உழைச்சா நிச்சயம் முன்னேறலாம் என்பதற்கு ரீசன்ட் எடுத்துக்காட்டாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் 35வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.

குழந்தைகளை கவர் பண்றதுங்கறது சில நடிகர்களுக்கு மட்டுமே கை வந்த கலை. அந்த கலையை சிறப்பாக செய்து வரும் சிவகார்த்திகேயனுக்கு, ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை பொழிந்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு, பல ஹாஷ்டேக்குகளை உருவாக்கி அவரது ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஹேப்பி பர்த்டே எஸ்.கே

ஹேப்பி பர்த்டே எஸ்.கே

விஜய் டிவியில் இருந்து பல திறமையானவர்கள் சினிமாவுக்கு முன்னேறி உள்ளனர். அதில், சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகப்பெரியது. 1985ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி பிறந்த சிவகார்த்திகேயன், இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அனிருத் வாழ்த்து

தனுஷ் - அனிருத் காம்போவை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - அனிருத் காம்போவும் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளன. எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ என கலக்கி வந்த இந்த கூட்டணி, டாக்டர் படத்திலும் இணைந்துள்ளது. சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹேப்பி பர்த்டே மை க்யூட்டி என வாழ்த்தியுள்ளார்.

அருண்ராஜா வாழ்த்து

மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வரிகளை எழுதிய அருண்ராஜா காமராஜ், தனது நண்பனான சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயனுடன் காமெடியில் அசத்திய, அருண்ராஜா, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராதிகா சரத்குமார்

சித்தி 2 சீரியலில் பிசியாக நடித்து வரும் நடிகை ராதிகா, நடிப்பில் அண்மையில் வெளியான வானம் கொட்டட்டும் படமும் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்து வருகிறது. கடந்த ஆண்டு, சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடித்த ராதிகா சரத்குமாரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ரஜினி ரசிகர்கள் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினி முருகன், வேலைக்காரன் என ரஜினிகாந்தின் பெயரையும், ரஜினிகாந்த் நடித்த படங்களின் பெயர்களையும் ரெஃபரன்ஸ் ஆக தொடர்ந்து தனது படங்களில் சிவகார்த்திகேயன் வைத்து வருகிறார்.

விஜய் ரசிகர்கள் வாழ்த்து

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனை, இன்னும் நீ ஏன் அங்க இருக்குற? இங்கே வா? என சிவகார்த்திகேயன் அடையப் போகும் வளர்ச்சியை அப்போதே கண்டு கொண்ட நடிகர் விஜய்யின் வீடியோ க்ளிப்களை போட்டு, விஜய் ரசிகர்களும், சிவகார்த்திகேயனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் வாழ்த்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போலவே, தல அஜித்தின் தீவிரமான ரசிகராகவும் சிவகார்த்திகேயன் தன்னை வெளிக்காட்டி வருகிறார். கடந்த ஆண்டு வெளியான மிஸ்டர் லோக்கல் படத்தில் ஹெல்மட் போடும் காட்சியில், நமக்கு தல தான் முக்கியம் என சிவகார்த்திகேயன் பேசிய வசனம் அஜித் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

தனுஷ் ரசிகர்கள் வாழ்த்து

சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் முன்னணி ஹீரோவாக இருக்க, முக்கிய காரணமே நடிகர் தனுஷ் தான். தனுஷின் ‘3' படத்தில் காமெடியனாக நடித்த சிவகார்த்திகேயனை, தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் புரொடக்‌ஷனில் எதிர்நீச்சல் படத்தின் மூலம், மாஸ் ஹீரோவாக மாற்றினார். தனுஷ் ரசிகர்களும், தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டாக்டர் ஃபர்ஸ்ட் லுக்

டாக்டர் ஃபர்ஸ்ட் லுக்

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட்டாக டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை 11.03க்கு வெளியிடப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு நேற்று வெளியாகி டிரெண்டானது. இன்று காலை முதலே சிவகார்த்திகேயன் ரசிகர்கள், #HBDSivaKarthikeyan, #HBDPrinceSivaKarthikeyan, #HappyBirthdaySivakarthikeyan என பல ஹாஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X