தன்னம்பிக்கையின் நாயகன் தல.. ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்.. டிரெண்டாகும் #HBDThalaAJITH
சென்னை: நடிகர் அஜித்தின் 49வது பிறந்த்நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தல ரசிகர்கள் சமூக வலைதளங்களை தல அஜித்தின் வாழ்த்து வலை தளங்களாக மாற்றி தெறிக்கவிட்டு வருகின்றனர்.
Recommended Video
இதுவரை வந்த மே 1ம் தேதிக்கும், இந்த மே 1ம் தேதிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
அனைத்து வகை தொழில்களையும், இந்த கொரோனா வைரஸ் முடக்கிப் போட்டிருப்பதால், உழைப்பாளர்கள் தின கொண்டாட்டமும், தல அஜித்தின் பிறந்தநாள் கொண்டாட்டமும் இந்த ஆண்டு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், தல பிறந்தநாளை சோஷியல் மீடியாவில் சமூக இடைவெளியுடன் அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

தல பிறந்தநாள்
தனது ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் தன்னம்பிக்கை நாயகனாக திகழும் தல அஜித்தின் 49வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 1971ம் ஆண்டு மே 1ம் தேதி ஆந்திராவில் பிறந்த அஜித் குமார் தமிழ் சினிமா ரசிகர்களின் தலை மகனாக தனது விடா முயற்சியால் மாறியுள்ளார். ஹேப்பி பர்த்டே தல அஜித் சார்!

ஆணழகன்
ஆணழகா உன் அடிமை இங்கே என தமிழ்நாட்டு பெண்களை காதல் கொள்ளச் செய்யும் பேரழகு கொண்ட காதல் மன்னன் நடிகர் அஜித். தனது நடிப்பாலும், ஹேண்ட்ஸம் ஆன சிரிப்பாலும், ரசிகர்கள் கூட்டத்திற்கு இணையாக ரசிகைகள் கூட்டத்தையும் ஒருங்கே பெற்றுள்ள தென்னிந்திய நடிகர் அஜித்.

5 மில்லியன் ரசிகர்கள்
தல அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ரசிகர்களால் உருவாக்கப்பட்ட #HBDDearestThalaAJITH என்ற ஹாஷ்டேக்கில் 5 மில்லியன் ரசிகர்கள் நடிகர் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அந்த ஹாஷ்டேக்கை உலகளவில் டிரெண்ட் செய்துள்ளனர். தல பிறந்தநாளான இன்று #HBDThalaAJITH என்ற மற்றொரு ஹாஷ்டேக்கையும் அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தன்னைத்தானே செதுக்கியவன்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், ஆரம்பத்தில் பல தோல்விகளையே சந்தித்து வந்தார். பின்னர், இத்தனை கோடி ரசிகர்கள் விரும்பும் ஒரு தலைவனாக தன்னை மாற்றிக் கொள்ள தன்னைத் தானே செதுக்கி இந்த உயரத்திற்கு தனது முழு வலிமையை காட்டி வந்துள்ள அஜித்தின் விடாமுயற்சியை போற்றாத பிரபலங்களே இல்லை என்று சொல்லலாம்.

டிரோன்
நடிப்பில் மட்டுமின்றி, பைக் ரேஸ், கார் ரேஸ், மினி விமானங்கள் இயக்குவது, டிரோன்களை உருவாக்குவது என பல திறமைகளை கொண்டுள்ளார் நடிகர் அஜித். அண்ணா பல்கலைக் கழக மாணவர்களுக்கு தக்ஷா எனும் டிரோன் குழுவை உருவாக்கி அதன் ஆசிரியராகவும் அஜித் செயல்பட்டு வருவது வேற லெவல் சிறப்பு.

வித்தியாசம் காட்டும் கலைஞன்
சிட்டிசன் படத்தில் பல வேடங்களில் நடிகர் அஜித் நடித்து அசத்தியிருப்பார். வில்லன் படத்தில் மாற்றுத் திறனாளியாகவும், வரலாறு படத்தில் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளிலும் நடித்து அசத்தியிருப்பார். மீசை வைத்தால் மாஸாகவும், மீசை எடுத்தால் கிளாசாகவும் மிரட்டும் இந்த பில்லாவின் மிரட்டல் இன்னும் பல காலங்கள் தொடரும்.


Click it and Unblock the Notifications











