திரும்பவும் தேரை இழுத்து தெருவில் விட்ட நெட்டிசன்கள்.. டிரெண்டிங்காகும் வடிவேலு.. ஏன்னு தெரியுமா?
வடிவேலு பெயர் டிரெண்டிங் ஆகியுள்ளது.
Recommended Video
சென்னை: மீண்டும் டிவிட்டரில் நடிகர் வடிவேலுவின் பெயர் டிரெண்டிங் ஆகியுள்ளது.
வடிவேலு பாணியில் சொல்வதென்றால், 'எவன் இப்டி கிளப்பி விடுறானே தெரியலையே' என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் சம்பந்தமே இல்லாமல் அடிக்கடி வடிவேலுவை வாண்டடாக டிவிட்டரில் டிரெண்டிங் ஆக்கி விடுகிறார்கள் சிலர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட இப்படித்தான், ப்ரண்ட்ஸ் படத்தில் வரும் நேசமணி கேரக்டரை டிவிட்டரில் டிரெண்டிங் ஆக்கினார்கள். மாபெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது அது.

மீண்டும் டிரெண்டிங்
இந்நிலையில் இன்று மீண்டும் வடிவேலுவை டிவிட்டரில் டிரெண்டிங் ஆக்கியுள்ளார்கள். யார் ஆரம்பித்த வேலை இது எனத் தெரியவில்லை. ஆனால் #HBDVadivelu என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகியுள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து
உண்மையில் கடந்த மாதமே வடிவேலுவின் பிறந்தநாள் முடிந்து விட்டது. இதனையும் பலர் தங்களது டிவீட்டில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் மற்றவர்களோ சின்சியராக வடிவேலுவுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.
மலைக்க வைக்கும் போட்டோ
வடிவேலு நடித்த பிரபல கதாபாத்திரங்களின் படங்களைத் தொகுத்து இந்த வாழ்த்து அட்டையை ரசிகர் ஒருவர் உருவாக்கியுள்ளார். பார்க்கும் நமக்கே மலைப்பாக உள்ளது. ஒவ்வொன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கேரக்டர்கள்.

இது வேற லெவல்
இது வேற லெவல் என்று தான் சொல்ல வேண்டும். வெறும் முகமில்லாத ஓவியங்களாக வடிவேலு கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் இதில் உள்ளன. ஆனால், இதைப் பார்க்கும் போதே நம்மால் வடிவேலுவின் முக ரியாக்சன் மனக்கண்ணில் வந்து போகிறது. அப்படியென்றால் எந்தளவிற்கு வடிவேலு நம் மனதில் பதிந்து போய் இருக்கிறார் என ஆச்சர்யம் தான் வருகிறது.


Click it and Unblock the Notifications











