twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ”சொக்கத் தங்கம்யா” கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள்; ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

    |

    சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

    Recommended Video

    கரூர்: விஜயகாந்த் பிறந்த நாள் விழா.... கேக் வெட்டி உற்சாக கொண்டாட்டம்

    நடிகர் விஜயகாந்தை தமிழ் சினிமா ரசிகர்கள் செல்லமாக கேப்டன் என அழைத்து வருகின்றனர்.

    என்னது அஸ்வினுக்கு 6 ஹீரோயின்களா...எந்த படத்துலனு தெரிஞ்சா அசந்துடுவீங்க என்னது அஸ்வினுக்கு 6 ஹீரோயின்களா...எந்த படத்துலனு தெரிஞ்சா அசந்துடுவீங்க

    நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் பல்வேறு ஹாஷ்டேக்குகளை உருவாக்கி விஜயகாந்துக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

    ஜெசிகாவின் இதயத்தில் பிரச்சினை.. நோய் தீர சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்

    69 வயதாகிறது

    69 வயதாகிறது

    கேப்டன் விஜயகாந்துக்கு 69 வயசா ஆகிடுச்சு என ரசிகர்கள் நிச்சயம் ஒரு பெரிய மூச்சு விடத்தான் செய்வார்கள். நரசிம்மாவாக கர்ஜித்துக் கொண்டிருந்த விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருவதும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமனா விஷயம் தான். மீண்டும் பழையபடி அதே கர்ஜனையோடு விஜயகாந்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி விஜயராஜாக பிறந்தவர் சினிமாவில் நுழையும் போது விஜயகாந்தாக மாறினார்.

    ரஜினி கமலுக்கு

    ரஜினி கமலுக்கு

    எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு பிறகு திரையுலகை கமல் மற்றும் ரஜினி ஆட்சி செய்து வந்தனர். அவர்கள் இருவருக்கும் கடும் போட்டியை கொடுக்கும் விதத்தில் ஏகப்பட்ட வெள்ளி விழா திரைப்படங்களை கொடுத்து அசத்தி இருந்தார் விஜயகாந்த். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், சின்னக் கவுண்டர், சத்ரியன், வல்லரசு, ரமணா, சொக்கத் தங்கம் என விஜயகாந்தின் வெற்றி படங்களின் வரிசையை சொல்லிக் கொண்டே போகலாம்.

    கருப்பு எம்ஜிஆர்

    கருப்பு எம்ஜிஆர்

    சினிமாவாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி எம்ஜிஆருக்கு பிறகு கொடை உள்ளம் கொண்ட மனிதர் என்றால் அது நம்ம கேப்டன் விஜயகாந்த் தான். அதன் காரணமாகவே அவரை பலரும் கருப்பு எம்ஜிஆர் என்றும் அழைத்து வந்தனர். இன்றும் அவரது திநகர் அலுவலகத்தில் அடுப்பு அணையாமல் எரிந்து கொண்டே பல வயிறுகளின் பசியை ஆற்றி வருகிறது குறிப்பிடத்தக்கது.

    அரசியலிலும் சக்சஸ்

    அரசியலிலும் சக்சஸ்

    ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு முன்னதாகவே கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருந்த போதே அரசியல் களம் கண்டு மிகப்பெரிய வெற்றியும் கண்டவர் விஜயகாந்த் தான். எதிர்கட்சி தலைவர் அந்தஸ்த்துக்கே உயர்ந்த அவர் திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக மீம் கிரியேட்டர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகினார்.

    தெறிக்கவிடும் ரசிகர்கள்

    தெறிக்கவிடும் ரசிகர்கள்

    ஆனால், இளைஞர்கள் முன்பு போல இல்லை. விஜயகாந்த் செய்த சாதனைகளும் அவர் செய்த உதவிகளையும் அறிந்து கொண்டு அவரது பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் #Vijayakanth, #HBDVijayakanth என ஏகப்பட்ட ஹாஷ்டேக்குகளை போட்டு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

    விஜய், சூர்யா

    தளபதி விஜய் மற்றும் நடிப்பின் நாயகன் சூர்யா என இரு பெரும் நடிகர்களை சினிமாவுக்குள் கொண்டு வந்து அவர்கள் மிகப்பெரிய ஆளாக வழிகாட்டியதே நடிகர் விஜயகாந்த் தான். விஜயகாந்த் பற்றி சூர்யா, விஜய், விவேக், மயில்சாமி உள்ளிட்ட பல நடிகர்கள் பேசும் இந்த காணொலியையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

    விஜய் ரசிகர்கள்

    விஜய் ரசிகர்கள்

    1984ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் வெற்றி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார் நடிகர் விஜய். அப்பா சந்திரசேகர் இயக்கத்தில் தொடர்ந்து விஜயகாந்த் நடித்த குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு உள்ளிட்ட படங்களில் விஜய் நடித்துள்ளார். விஜயகாந்த் உடன் சிறுவயதில் இருக்கும் தளபதி விஜய்யின் புகைப்படங்களை ஷேர் செய்து ரசிகர்கள் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

    English summary
    Actor and DMDK party leader Captain Vijayakanth turns 69 years old today. Tamil cinema fans celebrates his birthday and pouring wishes in social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X