twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மதுரையில் உள்ள சினிமா திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை

    |

    மதுரை: மதுரையில் உள்ள சினிமா தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதற்கு இடைக்கால தடைவிதித்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஹைகோர்ட் கிளை, சிறப்பு காட்சிகளால் ஏற்படும் வரிவருவாய் இழப்பு குறித்து மத்திய கலால் வரிதுறையின் (பொது விற்பனை வரி) முதன்மை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியர்,மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

    hc bench ban theatres in madurai to run special shows

    மதுரையை சேர்ந்த மகேந்திர பாண்டி என்பவர் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளை திரையிடுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு இன்று நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இனி வரும் காலங்களில் மதுரையில் உள்ள சினிமா தியேட்டர்களில் சிறப்பு காட்சிகள் திரையிடுவதற்கு இடைக்கால தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும், இது குறித்து மத்திய கலால் வரி துறையின் ( பொது விற்பனை வரி ) முதன்மை ஆணையர்,மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

    English summary
    Madras HC Madurai bench has banned all the theatres in Madurai to run special shows.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X