twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் சங்கத்திலிருந்து சஸ்பென்ட்... சரத்குமார் வழக்கை முடித்து வைத்தார் நீதிபதி

    By Shankar
    |

    சென்னை: நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், ராதாரவி நிரந்தரமாக நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் ஏற்கெனவே சஸ்பென்ட் செய்யப்பட்டதற்கு எதிராகப் போடப்பட்ட வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

    நடிகர் சங்கத்தின் அறக்கட்டளையில் முறைகேடு நடந்ததாகக் கூறி, முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோரை இடை நீக்கம் செய்வதாக இப்போதைய நிர்வாகம் அறிவித்தது.

    HC closed Sarath Kumar case

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், சரத்குமார், ராதாரவி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், "சரத்குமார், ராதாரவி ஆகியோர் தற்காலிகமாக சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். நேற்று நடந்த ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், இவர்கள் இருவரையும் நிரந்தரமாக சங்கத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

    எனவே, இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கு காலாவதியாகி விடுகிறது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்," என்றார்.

    இதற்கு நீதிபதி, "பத்திரிகைகளில் செய்தியை இன்று காலையில் படித்தேன். அதில் சரத்குமார், ராதாரவி ஆகியோரை நிரந்தரமாக தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிப்பதாக கூறப்பட்டிருந்தது. நிரந்தரமாக நீக்கப்பட்ட பின்னர், இடை நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிலுவையில் வைத்திருக்க முடியாது.

    எனவே, அந்த வழக்கை முடித்து வைக்கிறேன். அதே நேரம், நிரந்தரமாக தங்களை நீக்கி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சரத்குமார், ராதாரவி ஆகியோர் புதிதாக வழக்கு தொடரலாம்," என்றார்.

    English summary
    The Madras High Court has been closed the case filed by Sarathkumar and Radharavi against the suspension from Nadigar Sangam due to their dismissal from the same.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X