நடிகர் சங்க கட்டடம்.... 2 வாரங்களுக்கு இடைக்காலத் தடை
சென்னை: நடிகர் சங்க கட்டட கட்டுமானப் பணிகளைச் தொடர மேலும் இரு வாரங்களுக்கு தடையை நீட்டித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
ரூ 26 கோடி ரூபாயில் நடிகர் சங்கக் கட்டடம் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கட்டடத்துக்கு நடிகர்கள் ரஜினி, கமல் ஆகிய இருவரும் சேர்ந்து அடிக்கல் நாட்டினர்.

இதனிடையே, வித்யோதயா காலனியைச் சேர்ந்த கே.எம் ஶ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், 33 அடி பொது சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவதாகக் கூறப்பட்டிருந்தது. தியாகராய நகரில் ஹபிபுல்லா, பிராகாசம் தெருவை இணைக்கும் பகுதியில் இந்த ஆக்கிரமிப்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வேறு சாலையைப் பயன்படுத்தி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, நடிகர் சங்கம் கட்டடம் கட்டும் பணிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டட பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











