twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெ. தீபா தொடுத்த வழக்கு.. ஏ.எல். விஜய், கவுதம் மேனனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    By Sivam
    |

    Recommended Video

    Thalaivi Official Release date revealed | Thalaivi | Kangana | Arvind Swami

    சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் எடுக்கப்படும் தலைவி படத்திற்கு தடைவிதிக்க கோரி தீபா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க இயக்குனர் விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் தலைவி என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்-யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் "குயின்" என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனும் இயக்கி வருகின்றார்.

    HC issues notice for AL Vijay and Gautham Menon

    இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் தலைவி, ஜெயா, குயின் ஆகிய படங்கள், இணையதள தொடருக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்கு செய்திருந்தார்.

    இந்த வழக்கை தனி நீதிபதி, தள்ளுபடி செய்ததையடுத்து, தீபா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது .

    அந்த மனுவில், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், தனது வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனு தொடர்பாக இயக்குனர் ஏ.எல்.விஜய் மற்றும் விஷ்ணுவர்தன் இந்தூரி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் 2 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    Chennai High Court issues notice for AL Vijay, Gautham Menon and Vishnu Vardhan Induri for making Jayalalitha’s Biopic without the concern of J. Deepa.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X