'இதுக்கெல்லாம் போட்டீங்களா கேஸு..?' - 'மெர்சல்' வழக்கில் நீதிபதிகள் சரமாரி கேள்வி
Recommended Video

சென்னை : விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரிய மனுதாரருக்கு ஹைகோர்ட் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான மெர்சல் படம் தொடர்ந்து பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் சர்ச்சையைக் கிளப்பியதால் படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
விஜய் நடித்துள்ள மெர்சல்' திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரியும் அதற்கு வழங்கியுள்ள தணிக்கைச் சான்றிதழை திரும்பப் பெறக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாள்களுக்கு முன்னர் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மெர்சலுக்கு எதிரான மனு
அந்த மனுவில், `இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான கருத்துகள் மெர்சல் திரைப்படத்தில் இருக்கின்றன. குறிப்பாக, மத்திய அரசின் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவசர வழக்கு
அந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரான வழக்கறிஞர் அஷ்வத்தாமன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், இன்று இந்த வழக்கை விசாரித்தது.

நீதிபதிகள் கேள்வி
மெர்சல் திரைப்படத்தில் என்ன குறை கண்டீர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் மனுதாரருக்கு கேள்வி எழுப்பியுள்ளது. மெர்சல் என்பது படம் தான், நிஜவாழ்க்கை அல்ல எனவும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதுக்கெல்லாம் போட்டீங்களா
மாற்றுத்திறனாளிகள் தவறாக சித்தரிக்கப்படுவதை எதிர்த்து வழக்கு போட்டீர்களா? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளை எதிர்த்து வழக்குப் போடுங்கள் எனவும் காட்டமாகக் கூறியுள்ளனர் நீதிபதிகள்.

பொதுமக்களுக்கு பாதிப்பா
மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இருக்கிறதா?, அந்த வசனங்களினால் பொதுமக்களுக்கு பாதிப்பு இருக்கிறதா? என நீதிபதி மனுதாரருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். படம் பிடிக்கவிட்டால் பார்க்க வேண்டாம் எனவும்ம் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











