twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கட்டப்பஞ்சாயத்து விவகாரம்.. சிம்பு தொடர்ந்த வழக்கில் விஷாலுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

    |

    சென்னை : நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும், சிம்புவுக்கும் இடையே நீண்ட காலம் பிரச்சினை இருந்து வருகிறது.

    HC notice to Vishal

    இப்படம் மூலமாக ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய உரிய பணம் தர வேண்டும் என சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் மூலமாக மைக்கேல் ராயப்பன் வலியுறுத்தி வருகிறார். ஆனால் இதற்கு சிம்பு தரப்பு உடன்படவில்லை.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிம்பு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், 'தன்னுடைய பேருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் மைக்கேல் ராயப்பன் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும், தயாரிப்பாளர் சங்கம் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும்' குற்றம் சாட்டி இருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    English summary
    The Madras High court have sent a notice to actor Vishal and Micheal Rayappan in actor Simbu case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X