Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Mee too விவகாரம்.. லீனா மணிமேகலைக்கு ஒரு வாரத்திற்குள் பாஸ்போர்ட் வழங்க.. உயர்நீதிமன்றம் உத்தரவு !
சென்னை : கவிஞர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்டை முடக்க உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ஒரு வாரத்திற்குள் பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இயக்குனர் சுசி கணேஷன் மீது பாலியல் புகார் கூறிய கவிஞர் லீனா மணிமேகலைக்கு எதிராக, இயக்குனர் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.

மீ டூ
பத்திரிக்கை துறை, சினிமா துறை என பாகுபாடு இல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் நிகழ்ந்து வருகிறது. இதை மாற்றவே பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவை குறித்து "மீ டூ" மூலம் பேசி வருகின்றனர்.

அவதூறு வழக்கு
அந்த வகையில் திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக பெண் எழுத்தாளர் லீனா மணிமேகலை பரபரப்பு புகார் அளித்தார். இந்த புகாரை மறுத்த இயக்குநர் சுசி கணேசன் லீனா மணிமேகலையிடன் ரூ.1 நஷ்டஈடு கேட்டு சைதாபேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு கொடுத்தார். மேலும், லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை நீதிமன்றம் முடக்கியது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, லீனா மணிமேகலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ஆராய்ச்சி பணிக்காக கனடாவில் உள்ள யார்க் பல்கலைக்கழகம் செல்ல உள்ளதால் பாஸ்போர்ட்டை முடக்கம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

ஒரு வாரத்திள் பாஸ்போர்ட்
இந்நிலையில், கவிஞர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்டை முடக்கிய உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒரு வாரத்திற்குள் பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.