twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘கெத்து’ படத்துக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

    By Shankar
    |

    சென்னை: கெத்து படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கக் கோரிய வழக்கு விசாரணையில், அந்தப் படத்துக்கு வரிவிலக்கு அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்த கெத்து படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை வழங்க மறுத்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி, ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    HC orders to give Tax Exemption to Gethu

    வழக்கு விசாரணையின்போது, திருப்புகழில் கெத்து எனும் வார்த்தை பயன்படுத்தப்படுவதால் அது தமிழ்ச் சொல்தான் என்று நீதிபதி ஆர்.மகாதேவன் கருத்து தெரிவித்தார். பின்னர் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி எம்.துரைசாமி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வணிக வரித் துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருந்ததாவது:

    திரைத் துறையில் அனுபவம் பெற்ற 4 பேரும், 3 அதிகாரிகளும் படத்தை பார்த்து அளித்த அறிக்கையின் அடிப்படையில், கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தமிழ் அகராதியில், கெத்து என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. தமிழ் வளர்ச்சித்துறை இயக்குர் அளித்து விளக்கத்திலும், அது தமிழ்ச் சொல் அல்ல என்று கூறியுள்ளார். காபி, மேஜை, டீ உள்ளிட்ட பிற மொழி வார்த்தைகள் தமிழிலும் பயன்படுத்தப்பட்டாலும், அவை தமிழ் வார்த்தைகள் இல்லை. நாஸ்தா, பந்தா, கெட்டப்பு, கப்பு, அப்பீட்டு உள்ளிட்ட வார்த்தைகளையும் தமிழர்கள் பயன்படுத்துகின்றனர். அதுபோலத்தான், கெத்து என்ற கன்னட மொழிச் சொல்லும் தமிழர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தைக்கு மாறுபட்ட நிழல்படம், சமம் என்ற அர்த்தம் கூறப்படுகிறது.

    திருப்புகழில் 33 பிற மொழிச் சொற்கள் உள்ளன. அனுபவம், கிருபை, சைலம் என்று பிற மொழி வார்த்தைகளும், உருது வார்த்தையான சலாம் என்ற சொல்லும் இடம் பெற்றுள்ளன. எனவே, கெத்து படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை வழங்காமல் நிராகரித்தது சரியானது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்,' என்று அதில் கூறப்பட்டிருந்தது.

    மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் பி.வில்சன் 4 வகையான தமிழ் அகராதிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, கெத்து என்பது தமிழ்ச் சொல்தான் என்று வாதாடினார்.

    இதையடுத்து கெத்து வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், "கெத்து என்பது தமிழ் வார்த்தைதான். எனவே, அந்தப் படத்துக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும்," என்று வணிகவரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஏற்கெனவே ஏழாம் அறிவு, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தனது படங்களுக்கு நீதிமன்றம் மூலம் போராடியே வரிச் சலுகை பெற்றார் உதயநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Madras High Court has ordered to give Tax Exemption to Udhayanidhi starrer Gethu movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X