நந்தினி கதைத் திருட்டு வழக்கு: சுந்தர் சியிடம் விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவு
சென்னை: நந்தின் சீரியலின் கதைத் திருட்டு தொடர்பாக இயக்குநர் - நடிகர் வேல்முருகன் தொடர்ந்த வழக்கில், இயக்குநர் சுந்தர் சியிடம் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா தொடர் நந்தினி. இந்தத் தொடரை இயக்குநர் சுந்தர் சி தயாரித்துள்ளார். இந்தத் தொடரின் கதை தன்னுடையது என உரிமை கொண்டாடியுள்ள இயக்குநரும் நடிகருமான வேல்முருகன், அதற்கு ஈடாக ரூ 50 லட்சம் கேட்டிருந்தார்.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் சுந்தர் சிக்கு எதிராக கிரிமினல் வழக்கும் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்எஸ் ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக இயக்குநர் சுந்தர் சியிடம் போலீசார் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டில் உண்மையிருந்தால் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு சென்னை மாநகர கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











