தாண்டவம் படத்தை வெளியிட தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

By Shankar

சென்னை: தாண்டவம் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி நாளை அந்தப் படம் வெளியாகிறது.

உதவி இயக்குநர் பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நடிகர் விக்ரம், நடிகை அனுஷ்கா நடித்த தாண்டவம் படத்தின் கதை என்னுடையது. இந்த படத்தின் கதையை யு.டி.வி. நிறுவனத்திடம் நான் கூறினேன். அந்தக் கதையை படமாக்கும் போது படத்தின் இணை இயக்குனராக சேர்க்கிறோம் என்று அந்த நிறுவனத்தின் சார்பில் எனக்கு வாக்குறுதி அளித்தனர்.

ஆனால் என்னை சேர்க்காமலேயே படத்தை தயாரித்துள்ளனர். இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தாண்டவம் படம் வெளியிடப்பட்டால் எனக்கு பாதிப்பு ஏற்படும். எனவே அதை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

தாண்டவம் படத்தில் வரும் கதை என்னுடையது என்று அறிவிக்க வேண்டும். எனக்கு தகுந்த நஷ்டஈட்டை வழங்க யு.டி.வி. நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்," என்று கோரியிருந்தார்.

யு.டி.வி. சார்பில் ஆஜரான வக்கீல் சிவானந்தராஜ், "அவர், யு.டி.வி. நிறுவனத்திடம் மனுதாரர் கதை கூறினார் என்பதற்கு ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. தாண்டவம் படத்தில் இருப்பது அவரது கதை அல்ல. இந்தப் படம் வெளியிடப்படாவிட்டால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். எனவே தடை விதிக்கக் கூடாது," என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.சந்துரு, தாண்டவம் படம் வெளியாவதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X