ஓட்டலாக மாற்றிய விவகாரம்.. மாநகராட்சி நோட்டீஸ்.. தடை கோரிய நடிகர் சோனு சூட் மனு தள்ளுபடி!

By

மும்பை: சட்டவிரோத கட்டிடத்தை இடிக்கத் தடை கோரி நடிகர் சோனு சூட் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு உதவியவர் சோனு சூட்.

பல்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்டவர்களை பஸ்கள், ரயில், விமானம் மூலம் அனுப்பி வைத்தார்.

பெரிய மனது

பெரிய மனது

வெளிநாட்டில் சிக்கிய மாணவர்களையும் விமானம் மூலம் அழைத்து வர உதவி செய்துள்ளார். இதையடுத்து அவரது செயலை இந்தியாவில் உள்ள அனைவரும் பாராட்டி வருகின்றனர். படங்களில் வில்லனாக நடித்தாலும் நீங்கள்தான் ரியல் ஹீரோ என்றும் கொரோனா கால ஹீரோ என்றும் உங்கள் மனது பெரிது என்றும் கூறுகின்றனர்.

தொடர்ந்து உதவி

தொடர்ந்து உதவி

இதற்கிடையே, வேலை வாய்ப்புகளுக்கும் ஏற்பாடு செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், நெட்டிசன்களின் கேள்விக்கு பதிலளித்தும் உதவிகள் செய்தும் வருகிறார். அவருக்கான பாராட்டு மழை தொடர்கிறது. அவர் காட்டிய மனிதாபிமானம் மற்றும்
உதவிகளைப் பாராட்டி தெலங்கானாவில் அவருக்குக் கோயில் கட்டியுள்ளனர்

அனுமதி பெறாமல்

அனுமதி பெறாமல்

இந்நிலையில் நடிகர் சோனு சூட், மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது 6 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை அனுமதி பெறாமல் ஓட்டலாக மாற்றியதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு கட்டிடத்தை ஓட்டலாக மாற்றியது தொடர்பாக சோனு சூட்டுக்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.

போலீசில் புகார்

போலீசில் புகார்

இதை எதிர்த்து அவர் மும்பை சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். ஆனால் கோர்ட் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் ஜுஹு போலீசில் மாநகராட்சியினர் புகார் ஒன்றை அளித்தனர். அதில், சோனு சூட் உரிய அனுமதி பெறாமல் குடியிருப்பு கட்டிடத்தை ஓட்டலாக மாற்றியிருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது.

உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

இதற்கிடையே நடிகர் சோனு சூட், மும்பை மாநகராட்சி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய கோரியும், மாநகராட்சி இடிப்பு நடவடிக்கையை எடுக்காமல் இருக்க இடைக்கால தடைவிதிக்க வேண்டும் எனவும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் சோனுசூட் மனுவை தள்ளுபடி செய்தது.

கட்டிடம் இடிக்கப்படுமா

கட்டிடம் இடிக்கப்படுமா

நீதிபதி கூறும்போது, சட்டம், சட்டத்தின்படி நடப்பவர்களுக்கே உதவி செய்யும். எதுவாக இருந்தாலும் மாநகராட்சியை அணுகலாம். அடுத்து என்ன செய்யவேண்டும் என்று அவர்கள் முடிவெடுப்பார்கள் என்றார். இதையடுத்து அவருடைய கட்டிடம் இடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X