விந்தியா கோரிக்கை: உயர்நீதிமன்றம் தள்ளுபடி

By Staff

Vindhya
சென்னை: தொழிலதிபர் தன்னைக் கற்பழிக்க முயன்றாக கூறி ஓசூர் போலீஸில் கொடுத்த புகாரை வாபஸ் பெற அனுமதிக்குமாறு கோரிய நடிகை விந்தியாவின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து
விட்டது.

கடந்த 2004ம் ஆண்டு ஓசூரில் நடந்த கன்னிநிலா படத்தின் ஷூட்டிங்குக்காக விந்தியா ஓசூர் சென்றிருந்தார். இந்த நிலையில், தான் தங்கியிருந்த அறைக்குள் புகுந்து, தன்னை தொழிலதிபர் விஜய் கமல்ராஜ் கற்பழிக்க முயன்றதாக பரபரப்பு புகார் கூறினார் விந்தியா.

இதுதொடர்பாக அவர் ஓசூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீஸார் ஓசூர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை வாபஸ் பெற தன்னை அனுமதிக்குமாறு கோரி விந்தியா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று நீதிபதி ஜெயபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வக்கீல் எழுந்து, கற்பழிப்பு, கற்பழிப்பு முயற்சி போன்ற வழக்குகளில் சமரசத்திற்கு இடமில்லை என்று உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.

எனவே விந்தியா தனது புகாரை திரும்பப் பெற அனுமதிக்கக் கூடாது என்று கோரினார்.

இதை ஏற்ற நீதிபதி ஜெயபால், விந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தார். மேலும், வழக்கு விசாரணையை வருகிற 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X