twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இரும்புத்திரை' படத்துக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    சென்னை உயர்நீதிமன்றத்தில் இரும்புத்திரை படத்துக்கு எதிராக வழக்கு!- வீடியோ

    சென்னை : விஷால் நடித்துள்ள 'இரும்புத்திரை' படத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த தவறான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    நாமக்கல்லைச் சேர்ந்த நடராஜன் என்பவர் 'இரும்புத்திரை' படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி படத்திற்கு தடை விதிக்கமுடியாது என உத்தரவிட்டுள்ளார்.

    HC says We cant ban Irumbuthirai

    இரும்புத்திரை படத்தில், ஆதார் அடையாள அட்டைக்கு கொடுக்கப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்தக் காட்சிகளுடன் படம் வெளியானால், ஆதார் குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படும் எனவே அந்தக் காட்சிகள் நீக்கப்படும் வரை படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என நடராஜன் மனு அளித்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 'இரும்புத்திரை படம் குறிப்பிட்ட அந்தக் காட்சிகளுடன் சென்சார் போர்டில் சான்றிதழ் பெற்றுள்ளது. சென்சார் போர்டு அனுமதித்த நிலையில், படத்திற்கு தடை விதிக்க முடியாது' என உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து 'இரும்புத்திரை' படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், "படத்தைப் பார்க்காமலேயே இவ்வாறு வழக்கு தொடுப்பது தேவையில்லாதது. படத்தைப் பார்க்காமலேயே எப்படி அதைப் பற்றி அறிய முடியும். குறிப்பிட்ட அந்தக் காட்சிகளை சென்சார் அனுமதித்துள்ளது. திட்டமிட்டபடி படம் வெளியாகும்" எனக் கூறியுள்ளார்.

    English summary
    HC clear on Irumbuthirai release. Judge says, "We can't ban the film 'Irumbuthirai' which got censor approval."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X