'என்னை அதிகமாகக் கொடுமைப்படுத்தினார்..' அறிமுகப்படுத்திய இயக்குனர் மீது பிரபல நடிகை பகீர் புகார்!

By

மும்பை: பிரபல இயக்குனர் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக, அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

Recommended Video

Actress Challenge | Losliya, Simbran Tik Tok, Reba John, Athulya Ravi | Lock down diaries

சுபாஷ் கய் இயக்கிய, பர்தேஸ் என்ற இந்தி படம் மூலம் ஹீரோயின் ஆனவர், மஹிமா சவுத்ரி.

1997 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்திருந்தார்.

கோர விபத்து

கோர விபத்து

இதையடுத்து தில் கியா கரே, கில்லாடி 420, லஜ்ஜா, தேரே நாம் உட்பட பல படங்களில் நடித்தார். 2006 ஆம் ஆண்டு பாபி முகர்ஜி என்பவரை திருமணம் செய்துகொண்ட மஹிமாவுக்கு ஒரு மகள் இருக்கிறார். 2013 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற அவர், இப்போது தனியாக வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இருபது வருடங்களுக்கு முன் நடந்த கோர விபத்து பற்றி குறிப்பிட்டிருதார்.

கண்ணாடித் துண்டுகள்

கண்ணாடித் துண்டுகள்

1999 ஆம் ஆண்டு, தில் கியா கரே படத்தில் அஜய் தேவ்கன், கஜோல் ஆகியோருடன் நடித்தார். பெங்களூர் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு திரும்பியபோது, லாரி ஒன்றில் அவர் சென்ற கார் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அவர் முகத்தில் 67 கண்ணாடித் துண்டுகள் இருந்தன என்றும் சிகிச்சைக்குப் பிறகு குணமானதாகவும் கூறியிருந்தார்.

கொடுமைப்படுத்தினார்

கொடுமைப்படுத்தினார்

இந்நிலையில், இப்போது அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் சுபாஷ் கய் மீது பரபரப்பு புகாரைக் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: சுபாஷ் கய் என்னை அதிகமாகக் கொடுமைப்படுத்தினார். அவர் என்னை நீதிமன்றத்துக்கும் இழுத்துச் சென்றார். அது மிகவும் மன அழுத்தத்தைத் தந்தது. என்னை யாரும் ஒப்பந்தம் செய்யக் கூடாது என்று அனைத்துத் தயாரிப்பாளருக்கும் மெசேஜ் அனுப்பினார்.

ஒப்பந்த மீறலாக

ஒப்பந்த மீறலாக

1998 அல்லது 1999 ஆம் ஆண்டில் ஒரு இதழில் விளம்பரம் கூட கொடுத்தார். அதில் என்னுடன் யாரும் பணியாற்ற விரும்பினால் தன்னைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார், சுபாஷ் கய். இல்லை என்றால் அது ஒப்பந்த மீறலாக இருக்கும் என்றும் அந்த விளம்பரத்தில் அவர் கூறியிருந்தார். அப்படி ஒரு ஒப்பந்தம் எங்களுக்குள் ஏதுமில்லை. இருந்தும் செய்தார்.

சல்மான் கான்

சல்மான் கான்

அப்போது எனக்கு ஆதரவாக இருந்தவர்கள், நடிகர்கள் சல்மான் கான், சஞ்சய் தத், இயக்குனர்கள் டேவிட் தாவன், ராஜ்குமார் சந்தோஷி ஆகியோர்தான். இவர்கள் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள். தைரியம் அளித்தார்கள். இயக்குனர் டேவிட் தாவன், அவர் உங்களை கொடுமைப்படுத்த அனுமதிக்காதீர்கள் என்று சொன்னார். வேறு யாரிடம் இருந்தும் எனக்கு அழைப்பு வரவில்லை.

ஊர்மிளா மடோன்கர்

ஊர்மிளா மடோன்கர்

ராம் கோபால் வர்மாவின் சத்யா படத்தில் நான் நடித்திருக்க வேண்டும். அது எனது இரண்டாவது படமாக இருந்திருக்கும். ஆனால் எனக்குத் தகவல் தெரிவிக்காமல் ஊர்மிளா மடோன்கரை மாற்றி விட்டார்கள். என்னிடமோ, என் மானேஜரிடமோ தெரிவிக்கும் நாகரிகம் கூட அவர்களுக்கு இல்லை. இதன் ஷூட்டிங் தொடங்கிவிட்டது என்பதை பத்திரிகைகள் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். இவ்வாறு நடிகை மஹிமா கூறியுள்ளார்.

கட்டிப்பிடித்து முத்தம்

கட்டிப்பிடித்து முத்தம்

இயக்குனர் சுபாஷ் கய் மீது இதுபோன்ற புகார் சொல்வது இது முதன்முறையல்ல. ஏற்கனவே மாடலும் நடிகையுமான கதே சர்மா என்பவர், கடந்த 2018 ஆம் ஆண்டு மும்பை போலீசில் சுபாஷ் கய் மீது புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், தன்னை வீட்டுக்கு வரவழைத்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார் என்று அவர் மீது புகார் கூறியிருந்தார். பின்னர் இந்த வழக்கை ஆதாரம் இல்லை என்று கூறி மூடியது மும்பை போலீஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X