ரம்ஜானுக்கு பிரியாணி விருந்து.. பீஸ் இல்லாமல் சங்கடம்..நடிகருக்கு மன்சூர் அலிகான் செய்த சூப்பர் செயல்

சென்னை: கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் வீரபத்ரன் கேரக்டரில் நடித்து ஃபேமஸ் ஆனவர் மன்சூர் அலிகான். தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து 90கள் காலகட்டத்தில் பிஸியான நடிகராக வலம் வந்தார். நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் தடம் பதித்த அவரால்; நிலைத்து நிற்க முடியவில்லை. இப்போதும் அவ்வப்போது அரசியல் கருத்துக்களை அதிரடியாக தெரிவிப்பார். இந்நிலையில் காதல் பட நடிகர் சுகுமார்; மன்சூர் அலிகான் குறித்து போட்டிருக்கும் ஃபேஸ்புக் பதிவு ட்ரெண்டாகியுள்ளது.

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் உருவான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் வில்லன் ரோல் செய்தவர் மன்சூர் அலிகான். அந்தப் படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக; முதல் படத்திலேயே பட்டித்தொட்டியெங்கும் ஃபேமஸ் ஆகிவிட்டார். முதல் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு வரிசையாக பல படங்களில் வில்லனாக நடித்தார். முடிந்த அளவுக்கு தனது பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவிரியை எல்லாம் மாற்றி மாற்றியே நடித்து அசத்தினார்.

He Gave Me 1000 Silently Sugumar s Viral Post About Mansoor Ali Khan Wins Hearts
Photo Credit:

அரசியலிலும் மன்சூர்: காலம் செல்ல செல்ல அவருக்கான வாய்ப்புகள் குறைந்து போனது. அதனைத் தொடர்ந்து அரசியலுக்கு வந்தார். முதலில் நாம் தமிழர் கட்சிக்கு தனது ஆதரவை கொடுத்து தேர்தலில் களமாடினார். திடீரென அந்தக் கட்சியிலிருந்து விலகி தனி கட்சி ஆரம்பித்தார். அவர் எவ்வளவுதான் அரசியல் களத்தில் பேசினாலும் அவரது பேச்சுக்கள் அனைத்தும் சிரிப்பு மூட்டுபவையாக மட்டுமே அமைந்துவிடுகிறது. மாறாக எந்த ஒரு தாக்கத்தினையும் அது ஏற்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரிஷா பற்றி சர்ச்சை கருத்து: அதேபோல் அவர் தனது மனதில் பட்டதை ஓபனாக பேசிவிடக்கூடியவர். அவர் சில வருடங்களுக்கு முன்பு லியோ படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்தபோது திரிஷா குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தார். அதற்கு அத்தனை பேரும் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவித்தார்கள். தொடர்ந்து தனது வருத்தத்தையும் பதிவு செய்தார். அப்போதிருந்து கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறார். திரைப்பட வாய்ப்புகளும் முன்னர் போல் எதுவும் கிடைக்கவில்லை என தெரிகிறது.

Also Read
அப்படியே சங்கீதா மாதிரி.. நடிகையிடம் விஜய் ஓபனாக சொன்ன விஷயம்.. எப்போதும் மனைவி நியாபகமா?
அப்படியே சங்கீதா மாதிரி.. நடிகையிடம் விஜய் ஓபனாக சொன்ன விஷயம்.. எப்போதும் மனைவி நியாபகமா?

ரம்ஜான் விருந்து: சூழல் இப்படி இருக்க நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதனையொட்டி தனது நண்பர்கள், தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கு தன்னுடைய வீட்டிலேயே பிரியாணி விருந்து வைத்தார். அதில் கூல் சுரேஷ், கிங் காங், காதல் சுகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் ரம்ஜான் விருந்து குறித்து சுகுமார் போட்டிருக்கும் முகநூல் பதிவு ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. பலரும் மன்சூருக்கு பாராட்டு தெரிவித்துவருகிறார்கள்.

சுகுமாரின் பதிவு: அவர் தனது முகநூல் பக்கத்தில், "பாய் பிரியாணி பாய் பிரியாணி அப்டின்னு ஒரு வழியா (one way) போய் மன்சூர் அலிகான் அண்ணா வீட்டு பிரியாணி சாப்டாச்சி. ட்ராஃபிக் லேட்டா போனதால அண்டா கழுவுரப்போ entry. குஷ்கா mattum இருக்குன்னு ஏன் கண்ணு இவ்ளோ லேட்னு செல்லமா கோச்சிக்கிட்டு சாப்டுட்டு இருக்கப்போ கையில வச்சி அழுத்தினார் யாருக்கும் தெரியாமல்.

பார்த்தால் ஆயிரம் ரூபாய். மனிதருக்கு ஏதோ சங்கடமாக உணர்ந்துவிட்டார் போல. அதான் மன்சூரின் மாண்பு.அங்கே கட்டியிருந்த ஆட்டைக்காட்டி "அது பெண் ஆட்ட கொண்டு வந்துட்டாங்க..அதான் அதை வெட்டல. மனசு வரல. இல்லனா உனக்கு பீஸ் இருந்திருக்கும் ..சாரி பா" என்றார். அண்ணே நீங்க வேற லெவல். ஆக இனிதே ரம்ஜான் நிறைவேறியது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X