Just In
- 5 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 5 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 5 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 6 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கூல் டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்தார்... பின் அருகில் வந்து.. பிக்பாஸ் நடிகை பகீர் பாலியல் புகார்
மும்பை: குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக, பிக்பாஸ் நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இந்தியில், ஏ லம்ஹே ஜுடாய் கே, தபாங் 2, சிக்ஸ் டென் ஆகிய படங்களில் நடித்திருப்பவர் ரஸாமி தேசாய்.
போஜ்புரி, குஜராத்தி படங்களிலும் நடித்துள்ள இவர், பல இந்தி சிரீயல்களிலும் நடித்துள்ளார். இவர் இந்தி பிக்பாஸின் 13 வது நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இன்னும் அதிக பிரபலமானார்.
வைரமுத்து 13+.. அனு மாலிக் 6+.. மகளிர் தினம் ஒண்ணு தான் குறைச்சல்.. பாடகி சின்மயி பொளேர்!

வாய்ப்புக்காகப் படுக்கைக்கு
இவர், கடந்த 2012 ஆம் ஆண்டு தன்னுடன் டிவி தொடர் ஒன்றில் நடித்த நந்திஷ் சாந்து என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இந்நிலையில், சினிமாவில் நடிகைகளை பட வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்று பல நடிகைகள் புகார் கூறி வருகின்றனர். சமீபத்தில் நடிகை வரலட்சுமியும் இந்தப் புகாரை கூறியிருந்தார்.

பாலியல் ரீதியாக
இந்நிலையில் ரஸாமி தேசாயும் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை அனுபவத்தைத் தெரிவித்துள்ளார். அவர் தனது முதல் காஸ்டிங் இயக்குனர் சூரஜ் என்பவர் மீது இந்த புகாரை கூறியுள்ளார். அவர் கூறும்போது, 'அப்போது எனக்கு 16 வயது. சினிமாவுக்கு வந்தபோது உன் திட்டம் என்ன என்று அவர் கேட்டார். தெரியவில்லை என்றேன். பின்னர், படுகைக்கு சென்றால் மட்டுமே சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும், இல்லை என்றால் சும்மா இருக்க வேண்டியதுதான் என்று என்னை பாலியல் ரீதியாக, முதலில் சுரண்ட முயன்றார்.

குளிர்பானம்
ஒரு நாள் ஆடிஷன் இருப்பதாக அழைத்தார். சென்றேன். ஒரு குளிர்பானத்தைக் கொடுத்தார். அதில் போதை மருந்து கலந்திருந்தது. எனக்கு மயக்கமாக இருந்தாலும் அவரது செயலை நான் எதிர்த்துக் கொண்டே இருந்தேன். இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகு அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி வந்தேன். உடனடியாக இதை என் அம்மாவிடம் சொன்னேன்.

தொலைத்து விடுவேன்
அதிர்ச்சி அடைந்த அவர், அந்த காஸ்டிங் டைரக்டரை ஒரு ரெஸ்டாரென்டுக்கு வரவழைத்தார். அங்கு வைத்து அவரை ஓங்கி அறைந்தார். இனி என் பெண்ணை தொந்தரவு செய்தால் தொலைத்து விடுவேன் என்று மிரட்டினா. இதை அடுத்து என்னை தொந்தரவு செய்வதை அவர் விட்டார்' என்று தெரிவித்துள்ளார். ரஸாமி தேசாயின் இந்தப் பாலியல் புகார் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.