»   »  டாப்ஸியுடன் அடுத்து ரொமான்ஸ் செய்யப்போவது இவர்தான்!

டாப்ஸியுடன் அடுத்து ரொமான்ஸ் செய்யப்போவது இவர்தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருந்த வெள்ளாவிப் பொண்ணு டாப்ஸி, இப்போது பாலிவுட்டில் சில படங்கள் ஹிட் அடித்ததால் பாலிவுட்டே கதி என்று கிடக்கிறார்.

டாப்ஸிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. 'ஜூட்வா 2' படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருக்கும் டாப்ஸி அந்தப் படத்தில் வருண் தவானுடன் லிப் லாக் சீன்களிலும் நடித்திருக்கிறார். அடுத்தபடியாக ஷாத் அலி இயக்கத்தில், தில்ஜித் தோஸன்ஜி ஜோடியாக நடிக்க உள்ளார் டாப்ஸி.

He is the next to romance Taapsee

இந்தப் படம், முன்னாள் இந்திய ஹாக்கி அணி கேப்டன் சந்தீப் சிங்கின் காதல் கதையை மையமாக வைத்து உருவாக உள்ளது. இதில், சந்தீப் சிங்காக தில்ஜித் நடிக்க, அவரது காதலியாக டாப்ஸி நடிக்கிறார்.

He is the next to romance Taapsee

இப்படத்தில் டாப்ஸியும் ஒரு ஹாக்கி வீராங்கனையாக நடிக்க உள்ளார். இதற்காக தில்ஜித்தும், டாப்ஸியும் ஹாக்கி பயிற்சி பெற்று வருகின்றனர். பெயரிடப்படாத இப்படத்தை சினேகா ரஞ்சனி தயாரிக்கிறார். அக்டோபர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Read more about: taapsee, actor, டாப்ஸி
English summary
Taapsee has acted in the lip-lock scenes with Varun Dhawan in the movie 'Judwaa 2'. Taapsee will be pairing with Diljit Dosanjh in Shaad Ali direction.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil