twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செருப்புன்னு பேரு வச்சா யாரு படம் பாக்க வருவாங்க-பார்த்திபன் அம்மா உருக்கம்

    |

    Recommended Video

    என் புள்ள நல்லா வரணும்..இயக்குனர் பார்த்திபனின் அம்மா உருக்கமான பேச்சு | Oththaseruppu

    சென்னை: எம்புள்ள இன்னும் நல்ல நல்ல படம் எடுக்கணும், எல்லார்கிட்டேயும் நல்ல பேர் வாங்கணும்கிறது தான் என்னோட ஆசை என்று நடிகர், இயக்குநர் ஆர்.பார்த்திபனின் தாயார் நெகிழ்ச்சியோடு கூறினார்.

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன்
    எனக் கேட்ட தாய்

    He must make much more good movie-R.Parthiepan’s mother

    இந்த குறள் நிச்சயமாக பன்முக வித்தகரான ஆர்.பார்த்திபனுக்கு நிச்சயமாக பொருந்தும்.

    ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பாரதிராஜா முதல் அனைத்து திரை பிரபலங்களும் ஆர்.பார்த்திபனை வானளாவ புகழ்ந்தனர். தமிழ் சினிமா இவருக்கு இன்னும் சரியான அங்கீகாரத்தை அளிக்காமல் இருப்பது வேதனை என்று பாரதிராஜா குறிப்பிட்டிருந்தார்.

    He must make much more good movie-R.Parthiepan’s mother

    இந்நிலையில் ஆர்.பார்த்திபனின் தாயார் பத்மாவதி அம்மாள் நம்முடைய ஃபிலிமி பீட்டுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அதிலிருந்து சில துளிகள்.

    ஒத்த செருப்புன்னு பேர கேக்கும்போது எனக்கு பிடிக்கல. ஆனா படம் பாக்கும்போது ரொம்ப ரொம்ப நல்லா வந்திருக்கு. பேர் பிடிக்கலன்னு கேட்டா, என்ன இது செருப்புன்னு அதுவும் ஒத்த செருப்புன்னு பேர் வச்சா யார் வருவாங்கன்னு எம்மனசுக்கு தோனிச்சி. ஆனா எம் மகன் கிட்ட சொல்லலை. அதுக்கான சந்தர்ப்பமும் எனக்கு கெடைக்கல. இல்லென்னா எப்பவோ சொல்லியிருப்பேன்.

    இப்ப, படத்தை முழுசா பாத்துட்டேன். படம் நெறைய நாள் ஓடும். இங்க பாத்ததையும் சொல்லணும்னு தான் நெனச்சேன். ஆனா பேசுறதுக்கு சந்தர்ப்பம் கிடைக்கல. ஏன்னா எல்லாரும் கூட்டமா இருக்காங்க.

    Mei Review:ஏழைகள்தான் டார்கெட்.. திகிலூட்டும் உடல் உறுப்பு திருட்டு.. மருத்துவஊழலை தோலுரிக்கும் மெய் Mei Review:ஏழைகள்தான் டார்கெட்.. திகிலூட்டும் உடல் உறுப்பு திருட்டு.. மருத்துவஊழலை தோலுரிக்கும் மெய்

    என் பையன் டைரக்ட் பண்ணினதுல, நடிச்சதுலேயும் எனக்கு ரொம்ப பிடிச்ச படம்னு சொல்லணும்னா, புதிய பாதை, இந்த படத்தை பாத்துட்டு வந்த பொண்ணுங்க எல்லாம் எங்கிட்ட வந்து இவன எவ பெத்தாளோ தெரியல, ஒரு மோசமானவன பெத்து போட்டுருக்கா. என்னமா பேசுறான் இந்த பையன் அப்பிடின்னு எல்லாரும் கரிச்சு கொட்டுவாங்க.

    அப்ப எம்மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. என்னடா நம்ம புள்ள மொத படத்துலயே இப்படி கன்னா பின்னான்னு திட்டுவாங்குறானேன்னுட்டு. ஆனா படம் 100 நாளைக்கு மேல நல்லா போச்சு.

    அதே மாதிரி உள்ளே வெளியே படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்புறம் (பேத்தி கீர்த்தனாவை பார்த்து ஏன்ட்டி செப்பன்டி) சரிகமபதநி, புள்ள குட்டிக்காரன் படமும் ரொம்ப நல்லா இருக்கும். எம் புள்ள வீட்டுலயும் அப்படித்தான் இருக்கும். அதுவும் எம்மேல ரொம்ப பிரியமா இருக்கும். எனக்கும் அதே மாதிரிதான் அந்த புள்ளய கொஞ்ச நேரம் பாக்கலன்னாக்கூட மனச ஒரு மாதிரி இருக்கும்.

    ஒரு நாள் பாக்காம பேசாம இருந்தாக் கூட எனக்கு வருத்தமா இருக்கும். ஆனா புள்ள வேலை செய்யுற எடத்துல எப்பிடி இருக்கோ. நம்ம தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு நெனப்பேன். அதுக்கு பதிலா அவங்க புள்ளைங்கல பாத்து சந்தோசப்பட்டுக்குவேன்.

    என் புள்ள இன்னும் நல்ல படம் எல்லாம் பண்ணனும். எல்லார்கிட்டயும் நல்ல பேர் வாங்கணும். அவன் எப்பவும் எல்லார்க்கும் நல்ல புள்ளயாவே இருக்கணும். அதேமாதிரி தான் எம்புள்ள எப்பவும் நல்லா இருக்கணும், நல்லா வரணும்னுதான் கடவுள் கிட்ட வேண்டிக்குவேன் என்று மேலே பார்த்து கை கூப்பியவாறே முடித்தார் ஆர்.பார்த்திபனின் தாயார் பத்மாவதி அம்மாள்.

    English summary
    He must make much more good movie, and to get a good name in this social, this is want I need, said R.Parthiepan’s mother Padmavathi Ammal.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X