என்னை ஷோபாவில் தள்ளி அந்த இயக்குனர் என்மீது.. என்ன நடந்தது அன்று? பிரபல நடிகை போலீசில் விளக்கம்!

By

மும்பை: பிரபல இயக்குனர், தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்தது எப்படி என்று போலீசில் அளித்த புகாரில் விளக்கி உள்ளார் அந்த நடிகை.

இந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப். இவர், பிளாக் ஃபிரைடே, தேவ்.டி, தி லன்ச் பாக்ஸ், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உட்பட பல இந்தி படங்களை இயக்கியுள்ளார்.

சில படங்களில் நடித்தும் உள்ளார். தமிழில், அஜய் ஞானமுத்து இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

 பாயல் கோஷ்

பாயல் கோஷ்

இவர் மீது நடிகை பாயல் கோஷ், பாலியல் புகார் கூறி இருந்தார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாயல் கோஷ், சில தென்னிந்திய படங்களிலும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். அவர் கூறும்போது, 'சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருந்தபோது ஓர் இயக்குனரை மும்பையில் அவர் வீட்டில் சந்தித்தேன்.

 அனுராக் காஷ்யப்

அனுராக் காஷ்யப்

என்னை தனியறைக்கு அழைத்துச் சென்றார். கட்டாயப்படுத்தி தவறாக நடக்க முயன்றார். அங்கிருந்து தப்பி வந்தேன் என்று கூறியிருந்தார். முதலில் பெயரைக் குறிப்பிடாமல் கூறியிருந்த அவர், சில நாட்களுக்கு அனுராக் காஷ்யப் பெயரைக் கூறி குற்றம் சாட்டி இருந்தார்.

 நடிகர், நடிகைகள்

நடிகர், நடிகைகள்

கூடவே அனுராக் இயக்கத்தில் நடித்த சில நடிகைகளின் பெயரை குறிப்பிட்டு அவர்களும் அவரால் பாதிக்கப்பட்டதாக கூறியிருந்தார். இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டை இயக்குனர் அனுராக் காஷ்யப் மறுத்திருந்தார். அவருக்கு ஆதரவாக பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

 இன்னும் கொஞ்சநேரம்

இன்னும் கொஞ்சநேரம்

இதையடுத்து மும்பை வெர்சோவா போலீசில் அனுராக் காஷ்யப் மீது புகார் கொடுத்தார் நடிகை பாயல் கோஷ். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: இயக்குனர் அனுராக் காஷ்யபை மூன்று முறை சந்தித்துள்ளேன். இரண்டாவது முறை நடந்த சந்திப்பில், 2 மணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். பின்னர் அவருடன் டின்னர் சாப்பிட்டேன். இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாமே என்றார்.

 சல்வார் கமீஸ்

சல்வார் கமீஸ்

என் டிரைவருக்கு போக வேண்டும் என்று கூறி சென்றுவிட்டேன். அடுத்த சில நாட்கள் கழித்து அவரிடம் இருந்து மெசேஜ் வந்தது. படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்றும் தன்னை வீட்டில் வந்து சந்திக்குமாறும் கூறப்பட்டு இருந்தது. வரும்போது சல்வார் கமீஸ் அணிந்து வருமாறு கூறி இருந்தார். இரவு 7.30 மணிக்கு காஷ்யப் வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.

 மோசமான வாடை

மோசமான வாடை

அவர் வீட்டுக்குள் புகைப்பிடித்துக் கொண்டு இருந்தார். அந்த வாடை மிக மோசமாக இருந்தது. ஏன் இப்படி இருக்கிறது என்று கேட்டேன். கஞ்சா (marijuana)வை புகைக்கிறேன் என்றார். என்னையும் புகைப்பிடிக்கிறாயா? என்று கேட்டார். நான் மறுத்துவிட்டேன். பிறகு மற்றொரு அறைக்கு அழைத்து சென்றார். பழைய படங்களின் கலெக்‌ஷன்களை காண்பித்தார்.

 ஷோபாவில் தள்ளி

ஷோபாவில் தள்ளி

அப்போது திடீரென்று ஷோபாவில் என்னை தள்ளி, அவரது பேன்ட்டை கழற்றினார். கட்டாயப்படுத்தி என் மீது சாய்ந்தார். நான் கத்த முயன்றேன். அவர் என் வாயை அழுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். பிறகு சுதாரித்து அங்கிருந்து தப்பி வீட்டுக்கு வந்தேன். இதுபற்றி உடனடியாக யாரிடமும் நான் சொல்லவில்லை.

 மீ டூ இயக்கம்

மீ டூ இயக்கம்

சில நாட்களுக்குப் பிறகு என் மானேஜரிடமும் டிரைவரிடமும் இதுபற்றி பேசினேன். நான் புகார் அளிக்க விரும்பினேன். ஆனால், என் நெருங்கிய நண்பர்கள், புகார் கொடுத்தால் சினிமாவில் பணியாற்ற முடியாது என்றனர். மீ டூ இயக்கம் எனக்கு உற்சாகத்தை அளித்தது. இதுபற்றி எனது சகோதரி மற்றும் உறவினர்களிடம் விவாதித்த பின் இப்போது புகார் அளிக்க முடிவு செய்தேன். இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X