For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பர்த் டே ஸ்பெஷல்.. விரட்டி வந்த பைக்குகள்.. நடுரோட்டில் இறங்கிய விஜய்.. மனம் திறக்கிறார் நட்டி!

  By
  |

  சென்னை: நடிகர் விஜய்க்கு இன்று 46-வது பிறந்த நாள். வாழ்த்துகளால் நிரம்பிக் கிடக்கிறது சமூக வலைத்தளங்கள்.

  HBDThalapathy | நள்ளிரவில் வெளியானது மாஸ்டர் பட புதிய போஸ்டர்

  ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடும் ரசிகர்கள், கொரோனா காரணமாக கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள் இன்று.

  விஜய்யின் நண்பரும் பிரபல நடிகர், ஒளிப்பதிவாளரான நட்டி என்கிற நட்ராஜ் சுப்ரமணியத்திடம் பேசினோம்.

  வேற லெவலில் விஜய் பிறந்த நாள்.. ரகம் ரகமாக ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்ஸ்.. ரணகளமாகும் டிவிட்டர்! வேற லெவலில் விஜய் பிறந்த நாள்.. ரகம் ரகமாக ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்ஸ்.. ரணகளமாகும் டிவிட்டர்!

  சதுரங்கவேட்டை

  சதுரங்கவேட்டை

  தமிழ், இந்தி, தெலுங்கில் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், இப்போது பிரபல நடிகர். நாளை படம் மூலம் நடிகரான அவர், சதுரங்கவேட்டை மூலம் கவனிக்கப்பட்டார். விஜய் நடித்துள்ள யூத், துப்பாக்கி படத்தின் ஒரு பாடல் காட்சி, புலி ஆகிய படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் நட்டி. விஜய்யுடனா அனுபவம் பற்றி கேட்டதுமே உற்சாகமானார்.

  உதவி பண்ண முடியுமா?

  உதவி பண்ண முடியுமா?

  'ஆகச் சிறந்த மனிதர், நடிகர் விஜய். செட்டுக்குள்ள வந்தார்னா, லைட்மேன்ல இருந்து எல்லாருக்குமே விஷ் பண்ணிட்டுதான் வேலையை ஆரம்பிப்பார். அதே போல செட்ல யாராவது சோகமாக இருக்கறதா தெரிஞ்சுதுன்னா, அவங்க அசிஸ்டென்டை கூப்பிட்டு என்ன ஏதுன்னு விசாரிச்சு, அதுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ண முடியுமா?ன்னு நினைக்கிற நடிகர். தன்னோட செட்டுக்குள்ள இருக்கிறவங்களை சகோதரரா பார்க்கிற மனிதர் அவர்.

  நம்பி வந்தவங்க

  நம்பி வந்தவங்க

  ஆக்‌ஷன் காட்சி எடுத்தோம்னா, ரோப் சரியா கட்டியிருக்காங்களா, ஸ்டன்ட் கலைஞர்களுக்கான ரோப் எல்லாம் சரியா இருக்கன்னு அவங்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவார். ஒரு பெரிய ஹீரோவா இருக்கிறவர், இதை எல்லாம் பண்ணணும்னு அவசியமே இல்லை. ஆனா, அதை செய்வார் விஜய். தன்னை நம்பி வந்தவங்க நல்லா இருக்கணும்னு ரொம்ப கவனமா இருப்பார்.

  பெருமையான விஷயம்

  பெருமையான விஷயம்

  வெளிய தெரியாம பலபேருக்கு உதவி பண்ணிட்டு இருக்கார். அவரை எனக்கு தெரியும்னு நான் சொல்றதே எனக்கு பெருமையான விஷயம். அவர் அமைதியா இருப்பார். அந்த அமைதிக்குள்ள ஆயிரம் நல்ல விஷயங்கள் போயிட்டிருக்கும். புலி படத்துல வொர்க் பண்ணும்போது நிறைய கஷ்டபடுத்திட்டோம் அவரை. லில்லிபுட்டா அவர் நடிக்கணும். அந்த கஷ்டத்தைக் காட்டிக்காம நடிச்சார்.

  நடுரோட்டுல

  நடுரோட்டுல

  அந்த படத்துக்கு சில காட்சிகளை கேரளாவுல ஷூட் பண்ணினோம். தமிழ்ல அவருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்காங்களோ, அதே அளவு ரசிகர்கள் அங்கேயும் இருக்காங்க. ஒரு நாள் காலைல ஷூட்டிங் போகும்போது, அவர் காருக்கு பின்னாலயும் முன்னாலயும் நூறு நூறு பைக் போகும். நமக்கு பார்க்கும்போது யாராவது மோதி விழுந்துடக்கூடாதேன்னு பயமா இருக்கும்.

  மறக்க முடியாத

  மறக்க முடியாத

  ஒரு நாள் நடுரோட்டுல காரை நிறுத்தி இறங்கிட்டார் விஜய். ரசிகர்களை கூப்பிட்டு, நீங்க என் மேல இவ்வளவு அன்பு வச்சிருக்கிறதுக்கு நன்றி. நீங்க வண்டி ஓட்டிட்டு வர்றதை பார்த்த பயமா இருக்கு. உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா, வீட்ல எப்படி வருத்தப்படுவாங்கன்னு அட்வைஸ் பண்ணினாரு. பிறகு அங்க நின்னே எல்லாரோடயும் போட்டோ எடுத்துக்கிட்டார். அது மறக்க முடியாத சம்பவம். அவருக்கு இன்னைக்கு பர்த் டே..வாழ்த்துகள் விஜய்' என்கிறார் நட்டி.

  English summary
  Actor/Cinematographer Natty Praises his friend Vijay
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X