"வாவ்".... "ரெட்டிட்" பக்கத்தை தீயாய்க் கலக்கும் வேணு மல்லேஷின் இங்கிலீஷ் பாட்டு....!
டெல்லி: நாட்டில் நிறைய நல்ல பாடகர்களும் உள்ளனர்.. மோசமாகப் பாடும் பாடகர்களும் உள்ளனர். ஆனால் வேணு மல்லேஷ் இதிலிருந்து வித்தியாசப்படுகிறார்.
அவர் அட்டகாசமாக ஆங்கிலத்தில் பாடியுள்ள பாடல்கள் ரெட்டிட் பக்கங்களைத் தீயாய்க் கலக்கி வருகிறது.
சும்மா சொல்லக் கூடாது, அட்டகாசமாக பாடி அசத்தியுள்ளார் மல்லேஷ். ரெட்டிட் பக்கத்தைக் கலக்கி வரும் லேட்டஸ்ட் வைரல்களில் ஒன்றாக இது மாறியுள்ளது.

தானே எழுதி, தானே பாடி, தானே இசையமைத்து
தானே எழுதி, தானே பாடி, தானே இசையமைத்து பாடியுள்ளார் மல்லேஷ். மேலும் ஆங்கிலத்தில் மட்டுமே அவரது பாடல்கள் இடம் பெறுகின்றன என்பதும் விசேஷமானது.

2 வருடப் பழைய பாட்டு
இட்ஸ் மை லவ்.. இந்தப் பாட்டுதான் இப்போது ஹிட்டடித்துள்ளது. ஆனால் 2 வருடத்திற்கு முன்பே மல்லேஷ் உருவாக்கிய பாடலாகும். ஆனால் ரெட்டிட்டைச் சேர்ந்த ஒரு புண்ணியவான் இதைப் பார்த்து மிரண்டு போய், தூசி தட்டி புரமோட் செய்துள்ளார்.

செம ஹிட்
இந்தப் பாட்டு இப்போது ரெட்டிட்டில் ஹிட்டாகியுள்ளது. இதுவரை 39 லட்சத்து 95 ஆயிரத்து 102 வியூஸ் கிடைத்துள்ளன. இது நீண்டு கொண்டேவும் போகிறது.

பாடலில் வரும் சில வரிகள்...
People think I am somewhat mental
They don't know I am very sentimental....
My teacher scolds me that I neglect education
She don't know I collect real education

அமேஸிங்...
மல்லேஷின் பாடல் வரிகளைப் போலவ அவர் பாடிய விதமும் அமேஸிங்காகக உள்ளது. கேட்கவும், சிந்திக்கத் தூண்டும் வரிகள்..

இது மட்டுமா...
இது மட்டுமல்ல மல்லேஷின் இன்னொரு வீடியோவும் பார்வையில் சிக்கியது. அது இதை விட பிரமாதமாக உள்ளது. ஒரு காதலின் வலியையும், தோல்வியையும் சுட்டிக் காட்டுகிறார் இந்தப் பாடலில் மல்லேஷ்.. வலி அதிகம் போல.. பாடலில் அது தெரிகிறது.. மனதை உலுக்குகிறது.

ஐ லவ் யூ டியர்
அந்தப் பாடலில் வரும் சில வரிகள்...
I love you dear
Why can't you hear?
Please leave fear and come soon hear..
கேட்டுப் பாருங்க.. கலக்கியிருக்கிறார் மல்லேஷ்!
வேணு மல்லேஷின் இங்கிலீஷ் பாட்டு....!
வேணு மல்லேஷின் இங்கிலீஷ் பாட்டு....!


Click it and Unblock the Notifications











