twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “அவரே சொல்லிட்டார்,இப்பவாது விடுங்கப்பா”இரவின் நிழல் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பார்த்திபன்

    |

    சென்னை: பார்த்திபன் இயக்கத்தில் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக உருவாகிய 'இரவின் நிழல்' திரையரங்குகளில் ஓடி வருகிறது.

    முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட ஏராளமான பிரபலங்கள் 'இரவின் நிழல்' படத்தை பாராட்டியிருந்தனர்.

    'இரவின் நிழல்' முதல் நான் லீனியர் படம் இல்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது அது முடிவுக்கு வந்துள்ளது.

    அந்த 3 ஹீரோக்களுடன் மட்டும் நடிக்க மாட்டேன்...ஏன் ஜான்வி கபூருக்கு அவங்களுடன் என்ன பிரச்சனை? அந்த 3 ஹீரோக்களுடன் மட்டும் நடிக்க மாட்டேன்...ஏன் ஜான்வி கபூருக்கு அவங்களுடன் என்ன பிரச்சனை?

    புதுமைகளின் நாயகன்

    புதுமைகளின் நாயகன்

    'புதிய பாதை' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பார்த்திபன், நடிப்பில் இருந்து இயக்கம் வரையிலும் எல்லாவற்றிலும், தனக்கென புதிய பாதையை வகுத்துள்ளார் என்றே சொல்லலாம். எதுகை மோனையில் இவரது அடுக்குமொழி பேச்சும், வித்தியாசமான நடிப்பும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும். அதேபோல் பார்த்திபன் இயக்கும் படங்களும் வித்தியாசமாகவே இருக்கும்.

    ஒத்த செருப்பும் தேசிய விருதும்

    ஒத்த செருப்பும் தேசிய விருதும்

    'ஹவுஸ்புல்', 'கோடிட்ட இடத்தை நிரப்புக' என புதுமையான கதைக்களங்களில் பயணித்த பார்த்திபன், 'ஒத்த செருப்பு' படத்தி்ல் இன்னும் வித்தியாசம் காட்டினார். ஒரேயொரு கேரக்டரை வைத்துக்கொண்டு வெளியான இந்தப் படம், தேசிய விருது உட்பட பல சர்வதேச விருதுகளையும் வென்றது. இதைவிடவும் புதுமையான முயற்சிக்கு ரெடியானார் பார்த்திபன்.

    இசைப்புயலுடன் இரவின் நிழல்

    இசைப்புயலுடன் இரவின் நிழல்

    அதன்படி, ஆஸ்கர் நாயகன் ரஹ்மான் இசையில், 'இரவின் நிழல்' படத்தைத் தொடங்கினார் பார்த்திபன். நான் லீனியர் முறையில் சிங்கிள் ஷாட்டில், அதாவது ஒரே டேக்கில் கதையை முன்னும் பின்னுமாக எடுக்கிறேன் என பார்த்திபன் அறிவித்தார். இதுவே முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்றும் விளம்பரம் செய்யப்பட்டது. இதனால், 'இரவின் நிழல்' படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமானது.

    வரவேற்பும் பாராட்டுகளும்

    வரவேற்பும் பாராட்டுகளும்

    ஒருவழியாக படமும் ஷூட்டிங் முடிந்து திரையரங்குகளில் வெளியானது. முதல் பாதி முழுவதும் படத்தின் மேக்கிங் வீடியோவும், இரண்டாம் பாதியில் 'இரவின் நிழல்' மொத்த படமுமாக வெளியிட்டார் பார்த்திபன். இந்தப் படத்தை திரை பிரபலங்களும் ரசிகர்களும் மெய்சிலிர்த்து பார்த்திபனை பாராட்டினர். முதலமைச்சர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் என பலரும், பார்த்திபனின் இந்த முயற்சியை புகழ்ந்து தள்ளினர்.

    ப்ளுசட்டை மாறன் எழுப்பிய கேள்விகள்

    ப்ளுசட்டை மாறன் எழுப்பிய கேள்விகள்

    யூடியூப் விமர்சனங்கள் மூலம் தமிழ் சினிமாவை கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் ப்ளுசட்டை மாறன், 'இரவின் நிழல்' படத்தையும் விளாசித் தள்ளினார். அதாவது 'இரவின் நிழல்' முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் இல்லை என்றும், 'Fish and Cat' தான் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் எனவும் கூறி வந்தார். அவரின் இந்த விமர்சனம் கடும் சர்ச்சையானது. அதோடு ப்ளுசட்டை மாறனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே பெரிய யுத்தமே நடந்தது.

    ரசிகர்கள் குழப்பம்

    ரசிகர்கள் குழப்பம்

    ப்ளுசட்டை மாறனின் விமர்சனமும், பார்த்திபனிடம் அவர் எழுப்பிய கேள்விகளும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தின. 'இரவின் நிழல்' படம் குறித்து சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது இந்த குழப்பங்களுக்கு விடை கிடைத்துள்ளது. உலகளவில் அங்கீகாரம் பெற்ற சினிமா விமர்சகர் சைபல் சாட்டர்ஜி. 'இரவின் நிழல்' படம் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.

    சந்தேகமே வேண்டாம் மக்களே

    சந்தேகமே வேண்டாம் மக்களே

    ப்ளுசட்டை மாறன் குறிப்பிட்டிருந்த 'Fish and Cat' சிங்கிள் ஷாட் படம் தான், ஆனால், அது நான் லீனியர் இல்லை எனக் கூறியுள்ளார். அதேபோல், பார்த்திபனின் 'இரவின் நிழல்' படம், சந்தேகமே இல்லாமல் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் மூவி எனவும் சர்டிபிகேட் கொடுத்துள்ளார். பார்த்திபனும் இதனை தனது டிவீட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, ப்ளுசட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதனால், இதுவரை நீடித்த 'இரவின் நிழல்' பட சர்ச்சை, இத்தோடு முடிவுக்கு வந்துள்ளதாக ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

    English summary
    Parthiban put an end to the Iravin Nizhal controversies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X