twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்கே நடிப்பு கற்றுக்கொடுத்தார்..மேடையில் செல்லமாய் கலாய்த்த பாரதிராஜா..வெட்கத்தால் நெளிந்த சூர்யா

    |

    சென்னை: நானும் சூர்யாவும் நடித்த ஒரு காட்சியில் எனது நடிப்பை பார்த்து அங்கிள் நன்றாக இருக்கிறது கீப் இட் அப் என்று சூர்யா சொன்னதைப் பார்த்து அதிர்ந்து போய்விட்டேன் என்று பாரதிராஜா சொல்ல கீழே உட்கார்ந்திருந்த சூர்யா நெளிந்தார்.

    விருமன் பட டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மதுரையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட பாரதிராஜா மேடையில் வைத்து சூர்யாவை கலாய்த்து தள்ளினார்.

    ஆயிரம் பேருக்கு மேல் நடிப்பு சொல்லிக் கொடுத்த எனக்கு என்னுடைய நடிப்பை கீப் இட் அப் என்று சொன்னான் சூர்யா என்று கலாய்த்து தள்ளினர்.
    தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய இயக்குநர் இமயம்
    இயக்குனர் இமயம் பாரதிராஜா 16 வயதினிலே படத்தில் மூலம் அறிமுகமானார். ரஜினி, கமல் இரண்டு ஆளுமைகளையும் அந்த படத்தில் பயன்படுத்தி இருப்பார். கமலுக்கு வித்தியாசமான சப்பாணி வேடம், ரஜினிக்கு வில்லன் வேடத்தை கொடுத்திருப்பார். இது எப்படி இருக்கு, பத்தசச்சிட்டியே பரட்ட போன்ற வசனங்கள், ஸ்ரீதேவியின் அழகான பாத்திரம், இளையராஜாவைன் இனிமையான பாடல்கள், மலேஷிய வாசுதேவன் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடல் மூலம் அறிமுகம் என படத்தில் பல ரசிக்கத்தக்க அம்சம் இருந்ததால் படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது.

    ”சூர்யா, கார்த்தி மேல லவ் இருக்கு”: யுவன், “அதமட்டும் சொல்லாத” யுவனை செல்லமாக மிரட்டிய சூர்யா! ”சூர்யா, கார்த்தி மேல லவ் இருக்கு”: யுவன், “அதமட்டும் சொல்லாத” யுவனை செல்லமாக மிரட்டிய சூர்யா!

    பாரதிராஜாவின் தாக்கம் இல்லாத இயக்குநர்கள் இன்றும் இல்லை

    பாரதிராஜாவின் தாக்கம் இல்லாத இயக்குநர்கள் இன்றும் இல்லை

    பாரதிராஜாவின் வருகை தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் எனலாம். அதுவரை ஸ்டுடியோவில் இருந்த தமிழ் சினிமாவை கிராமங்களை நோக்கி நகர்த்தியவர் பாரதிராஜா என்று அனைவரும் பாராட்டுவார்கள். கிராமத்து மக்களின் இயல்பான யதார்த்த வாழ்க்கையை சினிமாவில் காட்சி படுத்தியவர் பாரதிராஜா. அவருடைய இயக்கத்தில் வெளியான பல படங்களின் பாதிப்பு இன்றுவரை பல இயக்குனரிடம் காணமுடிகிறது. அவரிடம் உதவி இயக்குனராக இருந்த மணிவண்ணன், பாக்கியராஜ் அவர்களது உதவி இயக்குனர்கள் பார்த்திபன், பாண்டியராஜன் என பெரிய பட்டாளமே தமிழ் சினிமா வரலாற்றில் காலூன்றியதை பார்க்கலாம்.

     சூர்யாவை கலாய்த்த பாரதிராஜா

    சூர்யாவை கலாய்த்த பாரதிராஜா

    அப்படிப்பட்ட பாரதிராஜா நேற்று ஒரு விழாவில் நடிகர் சூர்யாவை கலாய்த்து தள்ளி விட்டார். பாரதிராஜா பேசப்பேச சூர்யா நெளிந்து அழகாக தனக்குள் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார். கார்த்தி நடித்த விருமன் பட டிரைலர் நேற்று மதுரையில் வெளியானது. இந்த விழாவில் பாரதிராஜா, இயக்குனர் ஷங்கர், நடிகர் சூர்யா, நடிகர் சூரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய பாரதிராஜா பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டார். கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கும் ஷங்கரின் மகள் அழகு மட்டுமல்ல லட்சணமும் சேர்ந்து அமைந்தவர். அழகு மட்டும் இருப்பது பெரிதல்ல லட்சணமாய் இருப்பது தான் பெரிய விஷயம். நான் ரசிக்க தெரிந்தவன் நான் சொல்லுகிறேன் என்று பாராட்டினார்.

     கார்த்தியின் ஒவ்வொரு அங்கமும் நடிக்கும்- பாரதிராஜா

    கார்த்தியின் ஒவ்வொரு அங்கமும் நடிக்கும்- பாரதிராஜா

    கதாநாயகன் கார்த்தியை பற்றி பேசும்போது அவரது முதல் படமான பருத்தி வீரனை பார்த்தேன், மிகச்சிறந்த நடிப்பு. அவருடைய ஒவ்வொரு அங்கமும் நடிக்கும் அவருடைய பார்வை, அவருடைய நடை உடை, அவருடைய முடி கூட நடிக்கும் என்று பாராட்டினார். பின்னர் நடிகர் சூர்யா பக்கம் திரும்பிய பாரதிராஜா "நடிகர் சூர்யா ஆகச் சிறந்த நடிகன், அவருடைய ஒவ்வொரு படத்தையும் பார்த்து இருக்கிறேன் மிகச் சிறப்பாக நடிக்க கூடியவர், அவரும் நானும் ஒரே ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளோம்.

     சூர்யாவை டிஸ்டர்ப் பண்றாங்க - வருத்தப்பட்ட பாரதிராஜா

    சூர்யாவை டிஸ்டர்ப் பண்றாங்க - வருத்தப்பட்ட பாரதிராஜா

    நடிகர் சூர்யா வெறுமனே நடிகராக மட்டுமல்லாமல் மிகச் சிறந்த சமூக அக்கறை உள்ளவராக ஏழைகளுக்கு உதவி செய்பவராகவும் இருக்கிறார் மிகவும் பாராட்டத்தக்கது. அவரை சில காலமாக டிஸ்டர்ப் பண்றாங்க அதை அவர் கடந்து போகிறார். நடிப்பதோடு இல்லாமல் அகரம் அறக்கட்டளை மூலம் பாராட்டத்தக்க கல்விப்பணியைச் செய்கிறார் அவர்" என்று கூறிய பாரதிராஜா "சூர்யா சிறந்த நடிகருக்கான விருதை பெற்று விட்டார் கார்த்தி நீ தான் அடுத்து விருதை பெற வேண்டும்" என்று கூறினார்.

    டேய் எப்பா எனக்கே நடிப்பு சொல்லி கொடுத்தார் சூர்யா- செல்லமாய் கலாய்த்த பாரதிராஜா

    டேய் எப்பா எனக்கே நடிப்பு சொல்லி கொடுத்தார் சூர்யா- செல்லமாய் கலாய்த்த பாரதிராஜா

    தொடர்ந்து பேசிய அவர் "நானும் சூர்யாவும் மணிரத்தினம் படத்தில் தான் ஒன்றாக நடித்தோம் என்று நினைக்கிறேன். அந்த படத்தில் ஒரு காட்சியில் சூர்யா வெளிநாடு செல்ல வேண்டும் என்று சொல்லும் காட்சி போக முடியாது என்பதை சூர்யா அழகாக மறுக்கும் காட்சியில் சிறப்பாக நடித்திருப்பார். அழகாக கண்ணால் மறுப்பார். அந்த காட்சியில் நான் நடிக்கும் போது காட்சி முடிந்தவுடன் என்னிடம் வந்த சூர்யா "அங்கிள் அருமையாக பண்ணுனீங்க உங்களுடைய கண்ணசைவு சிறப்பாக இருந்தது கீப் இட் அப் என்று சொன்னார். நான் அதிர்ந்து போய் விட்டேன். அடப்பாவி ஆயிரம் பேருக்கு நான் நடிப்பு சொல்லித் தந்து இருக்கிறேன் என்னுடைய கண்ணசைவு சிறப்பாக இருக்கிறது என்று சொல்லும் போது இன்னும் நான் கற்றுக்கொள்ள வேண்டிய தூரம் அதிகம் இருக்குதுபோல என நினைத்துக் கொண்டேன். மிகச்சிறந்த ஒரு நடிகர் சூர்யா" என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

     வெட்கத்தால் நெளிந்த சூர்யா

    வெட்கத்தால் நெளிந்த சூர்யா

    இதை பார்த்த ரசிகர்கள் கைதட்டி, விசிலடித்தனர், அனைவரும் சிரித்தப்படி அந்த நகைச்சுவையை ரசிக்க கீழே அமர்ந்திருந்த சூர்யா வெட்கத்தில் நெளிந்தபடி சிரித்தார். பின்னர் தொடர்ந்து பேசிய பாரதிராஜா "சிவகுமார் அவரது பிள்ளைகளை வளர்த்த விதம் சிறப்பானது, என் வீட்டில் வந்து விளையாடிய சிறு பிள்ளைகள் சூர்யாவும், கார்த்தியும் அவர்கள் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்திருப்பதை நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை" என்று என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    English summary
    " Suriya and I acted one scene and Suriya said 'Uncle is well action, keep it up.'" I was shocked Bharathiraja said,
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X