நாளை ஜன நாயகன் ரிலீஸ்.. நான் ரஜினி ரசிகன்.. அமைச்சர் அருண் ராஜ் பரபரப்பு பேட்டி!
சென்னை: தமிழக முதலமைச்சரின் ரசிகர்கள், தொண்டர்கள் என ஒட்டுமொத்தத் தமிழகமுமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 'ஜன நாயகன்' திரைப்படம், பல்வேறு சென்சார் தடைகளைக் கடந்து நாளை ஜூன் 23-ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருகிறது. இதை திருவிழாவாகக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள்!
இந்தப் படம் குறித்துப் பேட்டியளித்துள்ள சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், முதலமைச்சர் எதைச் செய்தாலும் அதை முழு அர்ப்பணிப்புடன் செய்து முடிப்பார், அதுதான் அவரது வெற்றிக்குக் காரணம். அரசியலுக்கு வரும் முன் சினிமாவை மிகவும் நேசித்தார். காலை 9 மணிக்கு ஷூட்டிங் என்றால் 7 மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பிவிடுவார். இவ்வளவு பெரிய மாஸ் நடிகராக உயர்ந்த பிறகும் தன்னிலை மாறாமல் இருந்தார். அதே தீவிரமான அர்ப்பணிப்பைத்தான் இப்போது அரசியலிலும் காட்டி வருகிறார்.

அமைச்சர் அருண்ராஜ்: அரசியலில் முழு கவனம் செலுத்துவதற்காகவே தனக்கு மிகவும் பிடித்த சினிமாவை விட்டுவிலகி விட்டார். அவர் நடித்த கடைசித் திரைப்படமான 'ஜன நாயகன்' ரிலீஸாவது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம். படப்பிடிப்பின் கடைசி நாள் என்வதால், கேக் வெட்ட நினைத்தோம், ஆனால், எனக்கு ரொம்பவே எமோஷனலா இருக்கு என வேண்டாம்னு சொல்லிட்டாரு. இந்தப் படத்தில் நானும் ஒரு காட்சியில் நடித்திருக்கிறேன், அதனால் படம் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.
அமைச்சர்களுக்கு லீவே கிடையாது: அதைத்தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், நாளை படம் பார்க்க அமைச்சர் ஒருவர் லீவு எடுப்பதாகச் சொல்லியிருக்கிறாரே... நீங்களும் லீவு எடுக்கப் போகிறீர்களா? என்றார். அமைச்சர்களுக்கு 365 நாள்களும், 24 மணி நேரமும் விடுமுறையே கிடையாது, மக்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறோம். நான் கல்லூரியில் படித்த காலத்தில் ரஜினியின் தீவிர ரசிகன், அவரது படங்களை முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவேன். ஆனால், நாளைக்கு ஒரு நிகழ்ச்சி இருப்பதால் 'ஜன நாயகன்' படத்தின் முதல் நாள் காட்சியை என்னால் பார்க்க முடியாது என்றார்.


Click it and Unblock the Notifications