twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராதாரவி தொடர்ந்த வழக்கு... விஷால் நேரில் ஆஜராக உத்தரவு!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    விஷால் மீது வழக்கு தொடர்ந்த ராதாரவி. விஷால் நேரில் ஆஜராக உத்தரவு- வீடியோ

    சென்னை : விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராக பதவியேற்ற பிறகு பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். இதை எதிர்த்து முன்னாள் நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவி உள்ளிட்ட முன்னாள் நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கில் ஆஜரான விஷால் தரப்பு "வழக்கு முடியும் வரை முன்னாள் நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்" என்று உறுதி அளித்தனர். ஆனால் உறுதிமொழிக்கு மாறாக ராதாரவி உள்ளிட்ட சில முன்னாள் நிர்வாகிகளை புதிய நிர்வாகம் நீக்கியது.

    Hearing of Radharavi's case against vishal

    இதைத் தொடர்ந்து விஷால் மீது ராதாரவி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 19-ம் தேதிக்குள் விஷால் கோர்ட்டில் நேரில் ஆஜராகி இதற்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

    விஷால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மனுத் தாக்கல் செய்ததையடுத்து திரையுலைனர் பலர் அவர் மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அவர் அரசியலில் இறங்குவதற்கு நடிகர்ச் சங்கத்தைச் சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகர் ராதாரவி விஷால் மீது மோசடிக் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Nadigar sangam's Former secretary Radharavi have filed a case of contempt of court against Vishal in the Chennai High Court. The case came to trial. Upon hearing the case, Court orders vishal to come to explain.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X