‘ஹார்ட் பீட்‘ ரதி .. அப்பாவின் மரணம்.. காதல் தோல்வி.. பயந்த சத்யராஜ்.. நடிகை அனுமோலின் கதை!
சென்னை: ஜியோ ஹாட் ஸ்டாரில் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன வெப் சீரிஸ் தான் ஹார்ட் பீட். இந்த வெப் சீரிஸுக்கு நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்ற நிலையில், ஹார்ட் பீட் சீசன் 2 இந்த ஆண்டு தொடங்கியது. இதில், ரீனா என்கிற பெண், தனது தாய் தந்தை யார்? தன்னை ஏன் அனாதையாக விட்டார்கள் என்கிற கேள்விக்கு பதில் தேடும் கதையாக ஹார்ட் பீட் தொடங்கியது. வாராவாரம் வெள்ளிக்கிழமை அன்று நான்கு எபிசோட்கள் ரிலீஸ் ஆகிறது.
இந்த வெப் சீரிஸில் வரும் ரீனா, ரதி, அர்ஜுன், தேஜு, ராக்கி போன்ற கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தீபக் சுந்தர்ராஜன் மற்றும் அப்துல் கபீஸ் இருவரும் இணைந்து இந்த வெப் சீரிஸை இயக்கி வருகிறார்கள். இந்த வெப் தொடரில் வரும் ஹீரோ ஹீரோயினைத் தாண்டி மருத்துவராக நடித்துள்ள ரதிக்கு என்று தனி ரசிகர்கள் உருவாகி உள்ளனர். இவர் யார்? இவர் சினிமாவில் நடிக்க வந்தது எப்படி? 37 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடிகை அனுமோல்: மலையாள நடிகையான அனுமோல் 1987 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்துள்ளார். அதே கிராமத்திலேயே பள்ளி படிப்பை முடித்துவிட்டு, அந்த சிறிய கிராமத்தில் இருந்து சிட்டிக்கு வந்து மேல் படிப்பை தொடர்ந்து இருக்கிறார். இவருடைய ஆசையே தன்னுடைய ஒரே தங்கையை எந்தவிதமான கஷ்டமும் இல்லாமல் அவருடைய ஆசைப்படி படிக்க வைக்க வேண்டும், அம்மாவை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஏனென்றால், நடிகை அனுமோல், நான்காம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் போதே அப்பா இறந்துவிட்டதால், அம்மா மிகவும் கஷ்டப்பட்டு இரண்டு பெண் குழந்தைகளை வளர்த்து இருக்கிறார். இதனால், அனுமோல் வளர்ந்ததும் இவர்களை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதை லட்சியமாகவே வைத்திருக்கிறார்.
அயலி வெப் தொடர்: சிறுவயதில் இருந்தே பரதநாட்டியத்தில் ஆர்வம் கொண்ட இவர், முறைப்படி பரதம் கற்று, கிளாசிக்கல் நடனக் கலைஞராக உள்ளார். இவர் முதன் முதலில், 2010 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான கண்ணுக்குள்ளே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர், மலையாளத்தில் சாய்லியம், இவன் மேகரூபன், அகம் மற்றும் ஜம்னா பியாரி போன்ற ஏராளமான படங்களில் நடித்தார். இதையடுத்து, 2023 ஆம் ஆண்டு வெளியான அயலி என்ற வெப்தொடரில் நடித்திருந்தார். அந்த தொடரில் அவரது நடிப்பு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. இதே போல, சுரபியும் சுஹாசினியும் படத்தில் நடித்ததற்காக சிறந்த இரண்டாவது கதாநாயகிக்கான தொலைக்காட்சி விருதை வென்றார். பிக் பாஸ் மலையாளம் சீசன் 7ல் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
காதல் தோல்வி: சினிமாவிலும் ஹார்ட் பீட் வெப் தொடரிலும் வயது முதிர்ந்த தோற்றத்தில், திருமண வயதில் பெண் இருப்பது போல கதாபாத்திரத்தில் நடித்தாலும், உண்மையில் இவருக்கு திருமணமே செய்து கொள்ளாமல் சிங்கிளாகத்தான் இருக்கிறார். 37 வயதாகியும் சிங்கிளாக இருப்பதற்கு காரணம், நடிகை அனுமோல், ஒருவரை உருகி உருகி காதலித்துள்ளார். ஆனால், அந்த காதல் பாதியிலேயே முறிந்து போய்விட்டதால், இனிமேல் காதலுமே வேண்டாம், திருமணமும் வேண்டாம் என தனியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். ஆனால், நடிகை அனுமோலுக்கு தங்கை ஒருவர் இருப்பதால், இவருக்கு திருமணம் செய்தால் தானே தங்கைக்கு திருமணம் செய்ய முடியும் என பல வருடங்களாக, அனுமோலில் அம்மா வரங்களை பார்த்து வருகிறார். ஆனால், நடிகையோ வர மாப்பிள்ளைகளை எல்லாம் ரிஜெக்ட் செய்து வருகிறார்.
பிசியான நடிகை: ஹார்ட் பீட் சீரியலுக்கு பிறகு சினிமா, வெப் தொடர் என பிசியான நடிகையாக மாறி இருக்கும் அனுமோல் அண்மையில் அளித்த பேட்டியில், தனது தனிப்பட்ட வார்த்தை குறித்து மொத்த விஷயத்தையும் மனம் விட்டு பேசி இருந்தார். இவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர் சத்யராஜ் தானாம். சத்யராஜும், அனுமோலும் சேர்ந்து "ஓர் இரவு" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். அந்த படத்தில் அனுமோலில் நடிப்பை பார்த்த சத்யராஜ் பயந்து, என்னம்மா நடிக்கிறீங்க என்று அப்போதே பாராட்டி இருக்கிறார். அந்த அளவிற்கு அனைவரும் வியந்து பார்க்கும் நடிகையாக இருக்கும் நடிகை அனுமோல், ஹார்ட் பீட் வெப்தொடருக்கு பின் அனைவரும் கொண்டாடும் நடிகையாக மாறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











