அடக்கடவுளே.. 46 வயசு தான் ஆகுது.. கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்

பெங்களூரு: கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 46.

Recommended Video

Appu Please திரும்ப வா... கதறும் பிரபலங்கள் | Kannada Actor Puneeth Rajkumar Passed Away

ஜிம்மில் இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நடிகர் புனித் ராஜ்குமார் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

புனித் ராஜ்குமார் காலமானார்

புனித் ராஜ்குமார் காலமானார்

மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், நடிகர் புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிர்ச்சியூட்டும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகர் புனித் ராஜ்குமாரின் இந்த திடீர் மரணம் இந்திய சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

திரையுலகமே அதிர்ச்சி

திரையுலகமே அதிர்ச்சி

வெறும் 46 வயதே ஆகும் கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தி ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பாலிவுட், கோலிவுட், டோலிவுட், சாண்டில்வுட் என அனைத்து திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சோனு சூட் இரங்கல்

சோனு சூட் இரங்கல்

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் "நெஞ்சம் உடைந்தது.. உங்கள் இழப்பு எப்போதுமே பேரிழப்பாக எனக்கு இருக்கும் சகோதரரே" ( Heartbroken Will always miss you my brother.)என இரங்கல் தெரிவித்துள்ளார்.

அடக் கடவுளே

அடக் கடவுளே

அடக் கடவுளே.. இதென்ன கொடுமை.. இது பொய்யாக இருக்கக் கூடாதா? இவ்வளவு இளம் வயதில் மறைந்து விட்டாரே.. புனித் ராஜ்குமாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் அவர் ஆன்மா சாந்தியடையட்டும் என பிரபல நடிகை லக்‌ஷ்மி மஞ்சு இரங்கல் தெரிவித்துள்ளார்.

விட்டு போகாத அப்பு

விட்டு போகாத அப்பு

2002ம் ஆண்டு வெளியான அப்பு திரைப்படம் மூலம் ஹீரோவாக தடம் பதித்த நடிகர் புனித் ராஜை திரையுலகினர் செல்லமாக அப்பு என்றே அழைத்து வந்தனர். இந்நிலையில், நடிகை குஷ்பு தனது இரங்கல் ட்வீட்டில் அப்பு எங்களை விட்டு இவ்வளவு விரைவாக போய் விட்டாயே.. இந்த செய்தியை ஏற்க என் இதயம் மறுக்கிறது என கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிருத்விராஜ் இரங்கல்

பிருத்விராஜ் இரங்கல்

இது ரொம்ப வலிக்குது.. பல கோடி ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமாரின் ஆன்மா சாந்தியடையட்டும். இந்த பெருந்துயரத்தில் இருந்து அவரது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீண்டு வர பிரார்த்தனை செய்கிறேன் என மலையாள நடிகர் பிருத்விராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடைந்து போயிட்டேன்

உடைந்து போயிட்டேன்

இவ்வளவு சீக்கிரமாக சென்றுவிட்டாயே அப்பு.. என் மனம் சுக்கு நூறாக உடைந்து போய் விட்டது என நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் #BlackFriday #PuneethRajkumar உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளை பதிவிட்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் இரங்கல்

ஹர்பஜன் சிங் இரங்கல்

கிரிக்கெட் வீரரும் நடிகருமான ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்க்கை நிரந்தரமில்லாத ஒன்று என்பதையே திரும்ப திரும்ப வலியுறுத்தி வருகிறது. கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் பெருந்துயரில் ஆழ்த்தி உள்ளது. குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

கதறும் ரசிகர்கள்

கதறும் ரசிகர்கள்

கன்னட திரையுலகையே கட்டி ஆண்டு கொண்டிருந்த கன்னட பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் திடீரென காலமானதை அறிந்து கண்ணீர் கடலில் அவரது ரசிகர்கள் மூழ்கி உள்ளனர். ஒட்டுமொத்த திரையுலகமும் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பெங்களூருவில் தியேட்டர்கள் மூடப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X