»   »  வரவு, செலவு கணக்கு கேட்ட உறுப்பினர்கள்: நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் சலசலப்பு

வரவு, செலவு கணக்கு கேட்ட உறுப்பினர்கள்: நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் சலசலப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மூத்த நடிகைகள் காஞ்சனா, ஷீலா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

Heated arguments in Nadigar Sangam's general body meeting

கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் ஆண்டு கணக்கு வெளியிடப்பட்டது. நிலையான சொத்துக்கள் ரூ.1.46 லட்சம், நடைமுறை சொத்துக்கள் ரூ. 34.91 லட்சம், மூலதன கணக்கு ரூ.1.06 கோடி, ரொக்க கையிருப்பு ரூ.1.09 லட்சம், வங்கியிருப்பு ரூ.18.31 லட்சம் என கணக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது வரவு, செலவு கணக்கை முறையாக தெரிவிக்குமாறு கூறி சிலர் கேள்வி கேட்டனர். அதனால் சலசலப்பு ஏற்பட்டது. தங்களின் செயல்பாடுகளில் எந்த கெட்டதையும் கண்டுபிடிக்க முடியாது என்று பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் சங்க கட்டிடம் டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Nadigar Sangam's general body meeting witnessed heated arguments as some members questioned about the income and expenditures.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil