மலேசியாவில் மழை ஆரம்பம்.. ஜனநாயகன் ஆடியோ லான்ச்சை ரசிகர்கள் எப்படி பார்க்கிறாங்க பாருங்க.. செம ஐடியா

சென்னை: ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்னும் சற்று நேரத்தில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தொடங்கவிருக்கிறது. முதலில் கான்செர்ட் நடக்கிறது. அதில் விஜய் பட பாடல்கள் பாடவிருக்கின்றன. அதனைத் தொடர்ந்து இந்திய நேரப்படி மாலை ஆறு மணியளவில் இசை வெளியீடு நடக்கிறது. அதனை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில் புதிய சிக்கல் எழுந்திருக்கிறது.

அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் முழுக்க முழுக்க வரும் காலங்களில் அந்தப் பாதையில் மட்டுமே பயணப்பட முடிவு செய்திருப்பதால்; சினிமாவுக்கு டாட்டா சொல்லவிருக்கிறார். இதனால் ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ஜனநாயகன் படம்தான் கடைசி படம் என சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. மிகப்பெரிய ஹைப்பை இப்படம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

மலேசியாவில் தளபதி படை: படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடக்கிறது. இதனையொட்டி விஜய் தனது உறவினர்களுடன் அங்கு சென்றார். மேலும் பிரபலங்களும், கான்செர்ட்டில் பாடுவதற்காக பின்னணி பாடகர்களும், பாடகிகளும் அங்கே குழுமியிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டிலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் அந்த நாட்டுக்கு சென்றிருக்கிறார்கள். இதனால் மலேசியா எங்கும் விஜய் மயம்தான்.

Heavy Rain Can t Stop Fans at Vijay s Jana Nayagan Audio Launch in Malaysia
Photo Credit:

புக்கீட் ஜலீல் ஸ்டேடியம்: இந்த விழாவானது புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடக்கிறது. மொத்தம் ஒருலட்சம் பேர் வரை அந்த மைதானத்தில் அமரால்ம். அதேபோல் 80,000 வாகனங்கள்வரை பார்க்கும் செய்யலாம். இவ்வளவு பிரமாண்டமான மைதானத்தை விஜய் ரசிகர்கள் பெரும்பாலும் நிரப்பிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். நிகழ்ச்சி தொடங்குவதற்கு வெகு நேரத்துக்கு முன்னரே மைதானத்துக்கு வெளியே கூட ஆரம்பித்துவிட்டார்கள். நிச்சயம் இது போன்ற ஒரு கூட்டத்தை மலேசியாவில் யாரும் பார்த்திருக்கமாட்டார்கள் என சோஷியல் மீடியாவில் பெருமை பொங்க பதிவிட்டுவருகிறார்கள்.

நிகழ்ச்சி நிரல் இதுதான்: இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு தளபதி திருவிழா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. முதலில் நடக்கும் கான்செர்ட்டில் பின்னணி பாடகரான எஸ்.பி.பி சரண் முதல் பாடலாக மேகமாய் வந்து போகிறேன் பாடலை பாடுகிறார். அவரைத் தொடர்ந்து விஜய் பட பாடல் மழையை பின்னணி பாடகர்களும், பாடகிகளும் தொடர்ந்து கொடுக்கவிருக்கிறார்கள். கான்செர்ட்டை முடித்துவிட்டு மாலை ஆறு மணியளவில் ஆடியோ லான்ச் நடக்கிறது.

எழுந்த புதிய சிக்கல்: கூட்டம் எக்கச்சக்கமாக வந்தாலும்; யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக கோலாலம்பூரில் மழை பெய்ய ஆரம்பித்திருக்கிறது. இதனால் வந்திருக்கும் ரசிகர்கள் பாதிக்கப்படாமல் இருக்க அனைவருக்கும் ரெயின் கோட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கியிருக்கிறார்கள். அதனை அணிந்தபடி ரசிகர்கள் தளபதி திருவிழாவை கொண்டாடிவருகிறார்கள். ரசிகர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்பட்டிருப்பது பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

விஜய்யின் கடைசி இசை வெளியீட்டு விழா எந்த சிக்கலாலும் தடைபட்டுவிடக்கூடாது அல்லது இது என்ன நிகழ்ச்சி என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக அனைத்து வகையான முன்னேற்பாடுகளையும் செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவுக்கு விஜய் ரசிகர்கள் தங்களது பாராட்டை தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X