நயன்தாரா கல்யாணம்னா யாரும் பொது இடத்துல நடமாடக்கூடாதா? போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம்!
சென்னை : நடிகை நயன்தாரா -இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமணம் இன்றைய தினம் மகாபலிபுரத்தில் நடந்து முடிந்துள்ளது.
Recommended Video
ரஜினிகாந்த், விஜய், அஜித், கார்த்திக், சரண்யா, சரத்குமார் என முன்னணி நட்சத்திரங்கள் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
திருமணத்தையொட்டி திருமணம் நடைபெறும் ரெசார்ட்டை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

விக்னேஷ் சிவன் -நயன்தாரா திருமணம்
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருமணம் இன்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்கள் திருமணம் எப்போதுமே ரசிகர்களின் விருப்ப லிஸ்ட்டில் இருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு திருமணம் குறித்த அறிவிப்பை மேற்கொண்ட விக்னேஷ் சிவன் தற்போது திருமணத்தை முடித்துள்ளார்.

திரைப்பிரபலங்கள் பங்கேற்பு
இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த், அஜித், விஜய், கார்த்தி, சரண்யா, சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தத் திருமணத்தில் கலந்துக் கொண்டுள்ளனர். குறைந்த அளவிலானவர்களுக்கே இந்தத் திருமணத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பலத்தக் கட்டுப்பாடுகள்
இதனிடையே, ரசிகர்கள் திருமணத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. விஜபிக்கள் செல்போன் எடுத்து செல்ல அனுமதி இல்லை. இதனிடையே ரெசார்ட்டின் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. கடற்கரையையொட்டிய பகுதிகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

வாக்கிங் வந்தவர்கள் வாக்குவாதம்
இதையடுத்து காலையில் வாக்கிங் வந்தவர்களையும் அந்தப் பகுதியில் அனுமதிக்காததால் பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடற்கரை என்பது பொதுஇடம் என்றும் தங்களை வரக்கூடாது என்று சொல்ல முடியாது என்று அவர்கள் வாதம் செய்தனர். இதனால் அந்த இடமே பரபரப்புக்கு உள்ளானது.

நயன்தாராவே அனுமதிக்க மாட்டார்
இதனிடையே மற்றொரு இடத்தில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை நயன்தாராவே அனுமதிக்க மாட்டார் என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர். அந்த ஹோட்டலையொட்டிய கடற்கரையில் பொதுமக்கள் வாக்கிங் சென்றபோது அங்கிருந்த போலீசார் மற்றும் ஒருசில பவுன்சர்கள் அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர்.

மக்களுக்கு இடையூறு
என்னதான் பிரபலங்களாக இருந்தாலும் அவர்கள் இதுபோன்று மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துக் கொள்ளக்கூடாது என்பதும் அவர்களது வாதமாக இருந்தது. தொடர்ந்து பல கட்டுப்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருவதால், இதையொட்டி சமூக வலைதளங்களில் பல மீம்ஸ்களும் உலவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











