தமிழ் சினிமாவில் கலையுலக வாரிசுகள் … ஒரு ஜாலி ரிப்போர்ட்
சினிமாவில் வாரிசுகள் ராஜ்ஜியம் இன்றைக்கு கொடிகட்டிப்பறக்கிறது. டாக்டர் மகன் டாக்டர் ஆவதும், எஞ்சினியர் மகன் எஞ்சினியர் ஆவதும் அதிசயமில்லை. கலை உலகில் அதுவும் சினிமாவில் வாரிசுகளை நடிக்க வைப்பது என்பது வியப்பான விசயம்தான்.
நடிகர்கள் தங்கள் மகன்களை தயக்கமின்றி களம் இறக்கிவிடுவார்கள். ஆனால் மகள்கள் நடிப்பது என்பது அரிதான விசயம்தான். அப்படியிருந்தும் வரிசையாக வாரிசு நடிகைகள் தற்போது நடிக்க வந்து கொண்டிருக்கின்றனர்.

சிவாஜி… பிரபு… விக்ரம் பிரபு
தமிழ்த் திரை உலகில் வாரிசு நடிகர்கள் வரிசையில் தாத்தா சிவாஜி, மகன் பிரபுவுக்கு அடுத்த படியாக இப்போது பேரன் விக்ரம் பிரபு என மூன்றாவது தலைமுறை வாரிசு நடிகர் நடிக்க வந்திருக்கிறார்.

விஜயகுமார் - மஞ்சுளா வாரிசுகள்
தமிழ் திரை உலக தம்பதிகள் விஜயகுமார் மஞ்சுளாவின் வாரிசுகள் அருண் விஜயகுமார், வனிதா விஜயகுமார், பிரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் திரை உலகில் புகுந்தனர்.

சிவகுமார் – சூர்யா – கார்த்தி
கலை உலக மார்க்கண்டேயன் என்ற பெயருடைய சிவகுமார் மகன்கள் சூர்யா, கார்த்தி இப்போது திரை உலகில் சூப்பர் ஹிட் நடிகர்களாக வலம் வருகின்றனர்.

எஸ்.ஏ. சந்திரசேகரன் – விஜய்
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் மகன் விஜய் நடிகராக களம் இறங்கியுள்ளார். ஆனால் படம் இயக்குவதில் அவருக்கு அவ்வளவாக விருப்பம் இல்லையாம்.

டி.ராஜேந்தர் – சிலம்பரசன்
தமிழ் திரை உலகில் சகலகலா வல்லவர் டி. ராஜேந்தர் தனது வாரிசை குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே களம் இறக்கிவிட்டார். முதலில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு என்று போடப்பட்ட டைட்டில் இப்போது யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர் என வளர்ந்திருக்கிறது.

கஸ்தூரி ராஜா - செல்வராகவன், தனுஷ்
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் வாரிசுகளான செல்வராகவன், தனுஷ் இப்போது தமிழ் திரை உலகில் பேசப்படும் வாரிசுகளாக இருக்கின்றனர். ஒருவர் அப்பா வழியில் இயக்குநராகவும், மற்றொருவர் நடிகராகவும் மாறிவிட்டார்.

பாக்யராஜ் – பூர்ணிமா தம்பதியர் வாரிசு
திரைக்கதை மன்னன் என்று புகழப்படும் பாக்கியராஜ் - பூர்ணிமா தம்பதியரின் வாரிசுகள் சாந்தனு, சரண்யா ஆகியோர் திரை உலகில் நுழைந்தனர். இப்போது சாந்தனு பாக்கியராஜ் மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார்.

ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா நடிப்புத்துறையில் இறங்காமல் இயக்குநராக களம் இறங்கிவிட்டனர். ஆளுக்கு ஒரு படம் என்று இயக்கியுள்ளனர்.

கமல் மகள் ஸ்ருதி, அக்ஷரா
நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதி முதலில் இசை அமைப்பாளராகத்தான் திரை உலகில் நுழைந்தார். பின்னர் நடிப்பு அவருக்கு கை கொடுக்கவே வரிசையாக நடிக்கத் தொடங்கிவிட்டார். அந்த வரிசையில் அவரது இரண்டாவது மகள் அக்ஷராவும் விரைவில் திரை உலகில் களம் காண்கிறார்.

சரத்குமார் மகள்கள்
நடிகர் சங்கத்தலைவர் சரத்குமாரின் மகள்கள் வரலட்சும், மனீஷாஜித் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இதில் மனீஷாஜித் ஏற்கனவே அப்பா சரத் உடன் கம்பீரம் படத்தில் மகளாக நடித்திருக்கிறார்.

அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா
ஆக்ஷன் கிங் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவும் இப்போது நடிக்க வந்துவிட்டார். மும்பையில் நடிப்பு பள்ளியில் படித்த ஐஸ்வர்யா, தமிழில் பட்டத்து யானை படத்தின் மூலம் களம் இறங்குகிறார்.

ராஜசேகர் ஜீவிதா வாரிசு
பிரபல தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர், டாக்டர் ராஜசேகர், நடிகை ஜீவிதா தம்பதியின் மகள், ஷிவாணியும், விரைவில், திரைப்படத்தில் நடிக்கப் போகிறார். அடுத்தாண்டு முதல், மருத்துவம் படிக்க திட்டமிட்டிருந்த ஷிவாணி, இந்த இடைக்காலத்தில் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறாராம். அதற்கு பெற்றோரும் பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications